நண்பர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.08.2023

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 23 ஆம் நாளுக்கான [08 ஆகஸ்ட் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 01.45 - 02.45 வரை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கடன் தொல்லைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. 

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பணியிடத்தில் சில பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. நண்பர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். நீண்ட தூர பயணம் ஆதாயம் தரும். எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும். சிலருக்கு தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

நினைத்த காரியம் ஈடேறும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிறு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபகரமானதாக அமையும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டு. மனதிற்கு திருப்தியான நாளாக இருக்கும். பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும்.  மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். 

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த முக்கியமான காரியம் ஒன்று அனுகூலமாக முடியும்.

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பிள்ளைகளின் ஆடம்பரத்தால் சற்று கவலை அடைவீர்கள். எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சில முக்கிய காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும். புதிய நபர்களின் சந்திப்பு கிடைக்கும். கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கவும். நண்பர்கள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாகனத்தில் செல்லும்போது நிதானம் அவசியம்.

துலாம் | Nalaya Rasi Palan Thulam

மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். தாய்வழி உறவினர்களால் வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்துக் கொள்ளவும்.

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். நீண்டநாளாக தேடிய பொருள் கிடைக்கக்கூடும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உற்சாகம் தரும். காதல் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்; விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். கனிவான பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உறவினர்களிடமிருந்து சில பாதகமான செய்திகளைக் கேட்பீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நாள் முழுவதும் சற்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும். போட்டி மனப்பான்மையை குறைத்துக் கொள்வது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

மீனம் | Nalaya Rasi Palan Meenam

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். சக ஊழியர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் ஜெயம் உண்டு. பணி நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைபட்ட வரவு கிடைக்கும். 

Show comments

தொடர்பான செய்திகள்

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023.

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023.

சவால் நிறைந்த நாளாக இருக்கக்கூடும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.10.2023.

பண இழப்பு நேர வாய்ப்புள்ளதால் கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.10.2023.