Suzuki RM Z250 பைக் நேரடியா இந்த பைக் தான் போட்டி...!

Suzuki நிறுவனம் ஆப்ரோடு பைக்காக Suzuki RM Z250 உருவாக்கி உள்ளது. ஜப்பான் உற்பத்தி இன்ஜின் என்றாலே அதன் தரம் நன்றாக இருக்கும். ஜப்பானிய நிறுவனமான Suzuki யின் தயாரிப்பில் உருவான Suzuki RM Z250 பைக்கின் சிறப்புகளை  பற்றி காண்போம்.

Suzuki RM Z250 

Suzuki நிறுவனம் முதன்முதலில் 4 ஸ்ட்ரோக் பைக் உற்பத்தியை தொடங்கிய உள்ளது, அந்த முயற்சியில் Suzuki RM Z250 உருவாகியுள்ளது.  RM Z250 பைக் ஆப் ரோடு பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டது. 2499 cc சிங்கிள் சிலிண்டர் கொண்ட இன்ஜின் 36.3 bhp பவர் மற்றும் 25.2 Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஸ்மூத்தான இன்ஜின் பர்ஃபாமனஸ் நமக்கு எரிபொருளை சேமிக்க வைக்கும். முக்கியமாக இதன் நான்கு லேயர் சைலன்ஸர் பர்ஃபாமன்ஸை அதிகரிக்க உதவும். 

5 ஸ்பீடு கியர் கொண்ட இந்த பைக்கின் கிளச் சிஸ்டம் மிகவும் அசத்தலானது. wet multiplate கிளச் வண்டியின் சிறப்பான டிரைவிங் அனுபவம் அளிக்கும். முக்கியமாக சறுக்காத பயணம் அளிக்கும். மேலும் முன்னும் பின்னும் சிங்கிள் டோர் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

ஒரு நல்ல ஸ்போர்ட் லுக் தரும் சாப்பியன் மஞ்சள் (Champion Yellow No. 2) நிறத்தில் கிடைக்கும். கிக் ஸ்டார்டர் வசதி தான் பைக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.  ஆப்ரோடு பைக்காக இருந்தாலும் 30 km/l மைலேஜ் அளிக்குமாம். 

வசதியான டிராவிங் அளிக்க முக்கிய காரணம் இதன்  4 kg எடை  மற்றும் 330 mm ground clearance ஆகும். அத்துடன் 2185 mm நீளம் 835 mm அகலம் மற்றும் 1255 mm உயரம் கையாள எளிமையானதாக இருக்கும். 

டிசம்பர் 2022 விற்பனை தொடங்கிய இந்த Suzuki RM Z250  பைக்கின் மதிப்பு 7.15 லட்சம் ஆகும். இந்த பைக் Kawasaki KX 250F பைக்கிற்கு நேரடியான மாற்றாக அமையும். உயர்தர ஸ்பன்ஸன் கொண்ட ஆப் ரோடு பைக்காக உருவாகியுள்ள Suzuki RM Z250 பைக் பிரியர்களுக்கு விருப்பமானதாக உள்ளது.   

Show comments

தொடர்பான செய்திகள்

கவாஸாகி நிஞ்ஜா ZX-4R....ரூ.8.49 லட்சத்திற்கு...அப்படி என்ன இருக்கு? | Kawasaki Ninja ZX-4R Launch Date.

எல்லாமே டாப் பிராண்ட் தான்....ஆனா இதுல எது டாப் தெரியுமா? | TVS X vs Ola S1 Pro vs Ather 450X Comparison in Tamil.

தாறுமாறான அம்சங்களுடன் 2 புதிய எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்யும் கவாஸாகி.. | Kawasaki Electric Bike Launch.

ஏதெர் 450 எஸ் Vs ஏதெர் 450 எக்ஸ் எது பெஸ்ட்-னு பாக்கலாம் | Ather 450S vs Ather 450X Comparison.