பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்களில் ஆளுநரும் ஒருவர்..! - அமைச்சர் எ.வ வேலு விமர்சனம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சியில் செய்யப்பட்டு வரும் திட்டங்கள், சாதனைகள், அரசுக்கு ஏற்படும் நெருக்கடிகள் குறித்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக திகழ வேண்டும். மாநில அரசு செய்யும் நலத்திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை பெற்றுத் தர வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் ஆளுநராக இருப்பவர், 100ஆண்டுகளுக்கு  முன்பு தமிழ்நாட்டில் இருந்த இரட்டை ஆட்சி முறையை கொண்டுவருவதில் ஆர்வமாக இருக்கிறார். ஆட்சியில் உள்ள திமுகவினருக்கு அமைச்சர் பதவி முக்கியமா? சமூக நீதி முக்கியமா? என்று கேட்டால், திமுகவினர் சமூக நீதி தான் முக்கியம் என்பார்கள்.

வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடி செல்லவில்லை என்றும், பீகாரில் இருந்து தான் பலர் வந்துள்ளதாகவும், குறிப்பாக ஆளுநரும் பீகாரில் இருந்து தான் வந்துள்ளார் என்றும் விமர்ச்சித்தார்.

Show comments

தொடர்பான செய்திகள்

தஞ்சாவூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Thanjavur Power Shutdown Today.

தர்மபுரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Dharmapuri Power Shutdown Today.

“எங்களால முடியல” - தஞ்சை விவசாயிகள் அரசுக்கு பரபரப்பு கோரிக்கை! .

“பாப்கட் செங்கமலம்” குளித்து மகிழ ரூ.10 லட்சத்தில் நீச்சல் குளம்; அறநிலையத்துறை அசத்தல்! .