கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதுங்கி இருந்த பாம்பு - பொதுமக்கள் அதிர்ச்சி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பின்புறம் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள அறையில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீள சாரைப் பாம்பு தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறையினரால் பிடிக்கப்பட்டது.  

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். பொதுமக்கள், அலுவலர்கள், மற்றும் பணியாளர்களுக்கென வாகன நிறுத்துமிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பின்புறம் உள்ளது. அதே இடத்தில் ஒருபுறம் புதர்களும் மண்டி கிடக்கின்றன. எனவே அடிக்கடி இங்கு பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தென்படுகின்றன.  

இந்நிலையில் வானக நிறுத்துமிடத்தில் உள்ள அறையில் சுமார் 5 அடி நீள சாரை பாம்பு பதுங்கி இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களிடம் தெரிவித்து பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு மட்டும் மீட்புப்பணி துறையினர் 5 நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர்.  

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அடிக்கடி இப்பகுதியில் பாம்புகள், விஷ ஜந்துக்கள் தென்படுவது அதிர்ச்சியளிப்பதாகவும் மாவட்ட நிர்வாகம், அலுவலக வளாகத்திற்குள் மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Show comments

தொடர்பான செய்திகள்

கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாமன்னன் படத்தின் டிக்கெட் அனுப்பிய பாமக நிர்வாகி!.

21 குண்டுகள் முழங்க டிஐஜி விஜயகுமார் உடல் தகனம் - இறுதி மரியாதை செலுத்திய தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் .

கோவைக்கு விரைவில் மெட்ரோ - தீவிர ஆலோசனையில் நிர்வாகம்!.

கோயம்புத்தூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Coimbatore Power Shutdown Today.