புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்குப் பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல்  தொடங்கியுள்ளது. 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2022ம் ஆண்டிற்கான மழைக்குப் பிந்தைய புலிகள் கணக்கெடுப்பு இன்று முதல் டிசம்பர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.  
இதில் முதல் மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதை மற்றும் பெரிய தாவர உண்ணிகளான யானை, காட்டெருமை ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. 

அதன் பின்னர் அடுத்த மூன்று நாட்களுக்கு மாமிச உன்னிகளான புலி, சிறுத்தை ஆகியவற்றின் தடயங்கள் மற்றும் எச்சங்கள் கணக்கெடுப்பும் நடைபெறும்.  வரும் 10ம் தேதி முதல் தானியங்கி புகைப்பட கருவிகளைக் கொண்டு புலிகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மொத்தம் பத்து வனச்சரகங்களில் வனவர், வனக்காப்பாளர்கள் என ஆறு பேர் கொண்ட குழுக்களாக 150 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர். இவர்கள் காட்டிற்குள் குழுக்களாக பிரிந்து சென்று புலிகளின் கால்தடம், புலியின் கழிவுகளை வைத்து கணக்கெடுக்கும் பணியை நடத்த உள்ளனர். 

Show comments

தொடர்பான செய்திகள்

ஈரோட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Erode Power Shutdown Today.

காளிங்கராயன் அணைக்கட்டில் வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு..!.

முதல்வர் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக பவானியில் தொடரும் நகரமன்ற தலைவரின் அட்டூழியங்கள்.. .

ஈரோட்டில் பரபரப்பு..! மத்திய படை வீரர்கள் குவிப்பு!.