சில்லா சில்லா பாடல் எப்ப வெளியீடு தெரியுமா? தகவல் கிடச்சாச்சு...!

அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் முதல் சிங்கிளான சில்லா சில்லா பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வந்துள்ளது. இது படக்குழுவுக்கு மிக நெருக்கமானவர்கள் தந்த தகவல் என்பதால் ரசிகர்கள் இதனை மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து ரசிகர்களை வெறுப்பேத்திய பிறகு அஜித் தேர்ந்தெடுத்த இயக்குநர் ஹெச் வினோத். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சூப்பரான திரைப்படங்களை எடுத்திருந்ததால் அவரின் மீது நம்பிக்கை வைத்து 3 படங்களை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள சில்லா சில்லா பாடல் நேற்று முன்தினம் முதல் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறதாம். வெறித்தனமான ஆட்டம் போட்டு படக்குழுவினரை திகைக்க வைத்துள்ளார் அஜித். இந்த பாடலின் லிரிக் வீடியோ அடுத்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. 

காக்கா கத பாடல் புகழ் வைசாக் பாட்டு எழுத, அனிருத் தன் கந்தர்வ குரலில் பாடி அசத்தியுள்ளார் . 

Show comments

தொடர்பான செய்திகள்

புராஜெக்ட் கே குழுவிடம் ராஜமௌலி கேட்ட கேள்வி என்ன தெரியுமா?...

சோப்பில் அலங்காரப் பொருட்கள் வடிவமைத்து அசத்தல் - நாகர்கோவில் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு..

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு ஆதரவு? - தூத்துக்குடியில் நடிகர் சதீஷ் பேட்டி .

மலேசியா செல்லும் ராக்கி பாய் யஷ்.. ஏன் தெரியுமா?.