Thalaivar 171 director ரஜினிகாந்த் இயக்குநர் சிபியை கழற்றிவிட என்ன காரணம்?

ரஜினிகாந்தின் அடுத்த படமான தலைவர் 171 படத்தில் யார் இயக்கப்போகிறார் என்கிற தகவல்தான் இப்போதைய ஹாட் டாபிக். இணையதளம் முழுக்க இதைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரதீப் ரங்கநாதன்தான் இந்த படத்தை இயக்கவுள்ளார் என பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. 

இந்நிலையில், தலைவர் 171 படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கினால், அந்த படத்துக்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசை அமைப்பார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு அவர் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை சூப்பர் ஸ்டார் என்பதால் நிச்சயம் இந்த படத்தை செதுக்கிவிட வேண்டும் என நினைத்து வேலை செய்து வருகிறார் நெல்சன். 

இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை அவரது மகளே இயக்குகிறார். அதையும் முடித்துக் கொண்டு வரும் சூப்பர் ஸ்டாரை, இயக்கவுள்ளார் பிரதீப் ரங்கநாதன். அநேகமாக இது ரஜினிகாந்தின் கடைசி இரண்டு படங்களில் ஒன்றாக இருக்கும். இதனைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரிடமும் கதை கேட்டு வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

இதுவரை ரஜினிகாந்த் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்ததில்லை. இந்த கூட்டணி அமைந்தால் நிச்சயம் பிரதீப் ரங்கநாதன் யுவன்சங்கர் ராஜாவைத் தான் இசைக்காக கேட்பார் என்கிறார்கள். இதன்மூலம் ரஜினி படத்துக்கு இசை அமைக்கவுள்ளார் யுவன்ஷங்கர் ராஜா. 

விஜய் பட இயக்குநரை தேர்ந்தெடுத்த ரஜினிகாந்த், இப்போதும் விஜய் படத்தை இயக்கவேண்டி காத்திருந்த இயக்குநரைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்கிறார்கள். பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே பட வெற்றிக்கு பிறகு, அதே ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ண வேண்டி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அந்த படத்தில் விஜய்யை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. காரணம், விஜய்க்கு ஒரு கதை சொல்லி வைத்திருக்கிறார் பிரதீப். 

ஏஜிஎஸ் நிறுவனத்திடம் விஜய் நடிக்க ஒரு படமும் பேசப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்தை இயக்க விஜய், அட்லீயைத் தேர்வு செய்தார். அட்லீ படத்தின் பட்ஜெட் ஜாஸ்தியாக இருந்ததால், பிரதீப் படத்தை தயாரிக்கலாம் என கணக்கு போட்ட ஏஜிஎஸ்-க்கு இடி மேல் இடி. 

பிரதீப்பைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது லைகா நிறுவனம். லைகா நிறுவனத்துக்கு ரஜினிகாந்த் போட்ட ஒப்பந்தப்படி இரண்டு படங்கள் செய்து கொடுக்கவேண்டும். அதில் ஒன்றாக பிரதீப் ரங்கநாதனை ஒப்பந்தம் செய்துவிட்டனர். இதனால் ரஜினி ஏற்கனவே கேட்டு வைத்திருந்த டான் சிபி கதையை நிராகரித்திருக்கிறார். 

Show comments

தொடர்பான செய்திகள்

புராஜெக்ட் கே குழுவிடம் ராஜமௌலி கேட்ட கேள்வி என்ன தெரியுமா?...

சோப்பில் அலங்காரப் பொருட்கள் வடிவமைத்து அசத்தல் - நாகர்கோவில் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு..

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு ஆதரவு? - தூத்துக்குடியில் நடிகர் சதீஷ் பேட்டி .

மலேசியா செல்லும் ராக்கி பாய் யஷ்.. ஏன் தெரியுமா?.