நாடே பரபரப்பு; விபத்தில் சிக்கிய பிரதமர் குடும்பம்! 

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சாலை விபத்தில் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் மைசூரு-நஞ்சனகுடு நெடுஞ்சாலையில் அவர்கள் சென்ற கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பிரஹலாத் மோடியின் மனைவி, மகன், மருமகள், பேரன் ஆகியோர் காரில் இருந்துள்ளனர். 

அனைவரும் Mercedes-Benz SUV யில் பந்திபுராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரஹலாத் மோடியின் கார் விபத்துக்குள்ளானதை மைசூர் தெற்கு போலீசார் உறுதிப்படுத்தினர்.

பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் ஜேஎஸ்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்த விபத்தில் பிரஹலாத் மோடி குடும்பத்தினர் பயணித்த காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த சாலை விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

Show comments

தொடர்பான செய்திகள்

இந்திய விடுதலைக்காக போராடிய தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் பெயர்கள்.. | Tamil Nadu Freedom Fighters Name List in Tamil.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்! | Freedom Fighters Names in Tamil.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம்.. தமிழக அரசின் அருமையான திட்டம்.. | Nammai Kaakkum 48 Scheme Details in Tamil.

பக்தர்கள் அதிர்ச்சி...திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்...கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!.