ஹெல்மெட் போட்டு வந்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம் - போக்குவரத்து போலீசார் நூதன விழிப்புணர்வு!

இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு பேருமே ஹெல்மெட் அணிந்து வந்தால் ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் அல்லது ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மறைமலைநகர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி தெரிவித்தார்.

சென்னை புறநகர் பகுதியான மறைமலைநகர் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியில், தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட மறைமலைநகர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி அவர்கள் சக காவலர்களுடன் பள்ளிக்குச் சென்று ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை பெற்றோர்கள் முன்னிலையில் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தனசேகர், சிவப்பு தங்கரதக் கொடையாளர் அமைப்பின் நிறுவனர் முருகன், அன்னபூர்ணா கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் சரவணன், சமூக ஆர்வலர் சுஜித், பாக்கியராஜ், திருக்கச்சூர் பகுதியில் சேர்ந்த அரவிந்த் உள்ளிட்டார் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை பெற்றோர்கள் முன் எடுத்து கூறினர்.

அதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி பேசுகையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொள்வதால் இந்த விபத்து ஏற்படுகிறது. நீங்கள் இருசக்கர வாகனத்தில் இருவர் வரும்போது இருவருமே தலைக்கவசம் அணிந்து வந்தால் அடுத்த ஒரு வாரத்திற்கு 1 கிலோ தக்காளியை இலவசமாக தரப்படும். அல்லது ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும், என்றார்.

Show comments

தொடர்பான செய்திகள்

அனைத்து உள்ளங்களுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் | Happy Onam 2023 Wishes in Tamil.

இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் மக்கள் பீதி - வனப்பகுதிக்கு விரட்டியடித்த வனத்துறை!.

முனீஸ்வரன் கோவிலில் மூலவர் கல் சிலை கடத்தல் - கடத்தல் கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு!.

மயானத்தில் மட்டுமே சடலங்களை அடக்கம் செய்ய முடியும்..! - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.