திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம் - சந்திரயான்-3 வெற்றியடைய பிரார்த்தனை!

சந்திரயான்-3 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் அதன் மாதிரி திருப்பதியில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான எல்.வி.எம்.3-எம்4 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை பிற்பகல் 2.35 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்டவுன் இன்று பிற்பகல் 1.05 மணிக்கு தொடங்குகிறது.

சந்திரயான்-3ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், சந்திரயான்-3 மாதிரி வடிவத்தை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், இந்தியா தனது 3வது நிலவுப் பயணமாக சந்திரயான்-3 விண்கலத்தை நாளை விண்ணில் செலுத்துகிறது. இந்த பணிகள் அனைத்தும் வெற்றியடைய வேண்டும். சந்திரயான்-3 ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் நிலவில் தரையிரங்கவும் பிரார்த்தனை செய்தேன். இவ்வாறு அவர் பேசினார்.

Show comments

தொடர்பான செய்திகள்

அனைத்து உள்ளங்களுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் | Happy Onam 2023 Wishes in Tamil.

இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் மக்கள் பீதி - வனப்பகுதிக்கு விரட்டியடித்த வனத்துறை!.

ஹெல்மெட் போட்டு வந்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம் - போக்குவரத்து போலீசார் நூதன விழிப்புணர்வு!.

முனீஸ்வரன் கோவிலில் மூலவர் கல் சிலை கடத்தல் - கடத்தல் கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு!.