விரைவில் ரேஷன் கடைகளில் இதுவும் வழங்கப்படும்... அமைச்சர் சக்கரபாணி அதிரடி அறிவிப்பு!

நியாயவிலை கடைகளில் சிறு தானியங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கின்றார்.


கோவை நிர்மலா கல்லூரியில் தமிழ்நாடு சிறுதானிய கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற்று வருகிறது.டேன் மில்லெட் அமைப்பு சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 555 வகை மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
 

அதிக அளவிலான  சிறுதானிய மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் இடம் பெற்றதன் அடிப்படையில் உலக சாதனையில் இடம்பெற்றது. அமெரிக்காவின் உலக சாதனை அமைப்பின்  அதிகாரப்பூர்வ பதிவு மேலாளர் கிரிஸ்டோபர் டெய்லர் உலக சாதனை சான்றிதழை வழங்கினார். தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி சான்றிதழை பெற்றுக் கொண்டார். 

 

தொடர்ந்து மாநாட்டில் பேசிய தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி 
மால்களிலும்,வெளி கடைகளிலும், பேக்கரி,  உணவுப் பொருட்களைதான் மாணவர்கள் வாங்கி சாப்பிடுகிறீர்கள் எனவும் முதல்வர் சிறுதானியங்களை ஊக்கபடுத்த வேண்டும் என்பதற்காக தர்மபுரி,நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ கேழ்வரகு இந்த ஆண்டு வழங்க தெரிவித்துள்ளார் எனவும் கூறினார்.  

 

மேலும் வரும் ஆண்டுகளில் அரசியை படிப்படியாக குறைத்து சிறுதானியங்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நோய்களை கட்டுப்படுத்த சிறுதானியங்களை பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் அனைவருக்கும் சத்தான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்   முதல்வர்  எடுத்துச்செல்ல உள்ளார் எனவும் தெரிவித்தார். 

 

தற்போது விவசாயிகள் வருமானத்தை அதிகம் தரும் பயிர்களை நோக்கி சென்றுவிட்ட நிலையில் சிறுதானிய வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும்  மாணவர்கள் பேக்கரி,கடைகள், மால்களுக்கு,கே.எப்சிக்கு போய் உணவுகள் உண்பதை தவிர்த்து சிறுதானியங்களை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

Show comments

தொடர்பான செய்திகள்

இந்திய விடுதலைக்காக போராடிய தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் பெயர்கள்.. | Tamil Nadu Freedom Fighters Name List in Tamil.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்! | Freedom Fighters Names in Tamil.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம்.. தமிழக அரசின் அருமையான திட்டம்.. | Nammai Kaakkum 48 Scheme Details in Tamil.

பக்தர்கள் அதிர்ச்சி...திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்...கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!.