வீட்டிலேயே குழந்தைகளுக்கு தேவையான குளியல் எண்ணெய், பொடி செய்வது எப்படி?|How to make baby bath oil and powder at home?

வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான குளியல் எண்ணெய் மற்றும் குளியல் பொடி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம். 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் சருமம் மற்றும்  கேசத்தை பராமரித்து பாதுக்கவும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

குழந்தை சருமத்துக்கும் கேசத்திற்கும் பயன்படுத்தக்கூடிய குளியல் எண்ணெய்,குளியல் பொடி வீட்டிலேயே  இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி எப்படி தயார் செய்து பயன்படுத்துவது என்பதைக் காணலாம். முதலில்  குழந்தைகளுக்கான குளியல் எண்ணெய் தயார் செய்யும் முறை  பற்றிப் பார்க்கலாம்.

குளியல் எண்ணெய் தயார் செய்வதற்குத் தேவையான பொருட்கள்

  • காய்ந்த  ரோஜா இதழ்கள்

  • மகிழம் பூ

  • ஆவாரம் பூ

  • வெட்டிவேர்

  • துளசி இலை

  • நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டு எண்ணெயும் ஒரே அளவு எடுத்துக் கொள்ளவும்.

குளியல் எண்ணெய் தயார்செய்யும் முறை

1.முதலில் மகிழம் பூ,ஆவாரம் பூ,வெட்டிவேர் மற்றும் துளசி இலை ஆகியவை மிதமான வெயில் காயவைத்து  எடுத்துக் கொள்ளவும்.

2.அதன் பின் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும்  2 டேபிள்ஸ்பூன்  நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.

3.அதனுடன்   காயவைத்த மூலிகைகளைச் சிறிதளவு சேர்த்துக் கொண்டு மற்றும் அதனுடன் காய்ந்த ரோஜா இதழ்கள் சிறிதளவு சேர்த்து சூடுபடுத்தவும்.

4.சூடுபடுத்திய பின்,அந்த எண்ணெய் மூலிகையுடன் சேர்த்து வெயில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

5.இரண்டு நாட்களுக்குப் பிறகு,அந்த எண்ணெய் எடுத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்கான குளியல் எண்ணெய் தயார்.குழந்தைகளுக்குக் குளியல் பொடி தயார் செய்வதைப் பற்றிப் பார்க்கலாம்.

குளியல் பொடி தயார் செய்வதற்குத் தேவையான பொருட்கள்

  • ரோஜா இதழ் பவுடர்

  • கஸ்தூரி மஞ்சள்

  • அரிசி மாவு

  • பாசிப்பயிறு மாவு

குளியல் பொடி தயார்செய்யும் முறை

1.இரண்டு டேபிள்ஸ்பூன் பாசிபயிறு மாவு எடுத்துக் கொண்டு அதன் உடன் அரிசி மாவு இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கவும்.

2.கலவையுடன் சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் ரோஜா இதழ் பவுடர் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கவும்.

3.கலவையுடன் தேவையான அளவு ரோஸ் பவுடர் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொண்டால் குளியல் பொடி தயார்.

குழந்தைகளுக்கு எப்படிப் பயன்படுத்துவது

  1. தயார் செய்த எண்ணெய் எடுத்துக் கொண்டு,குழந்தைக்கு உடல் மற்றும் சருமம்,கேசத்தில் நன்றாகத் தேய்த்து விடவும்.அப்படியே 30 நிமிடங்கள் சருமத்தில் ஊற விடவும். 

  2. அதன் பின்,தயார் செய்த குளியல் பொடியை எடுத்துக் கொண்டு எண்ணெய் தேய்த்த குழந்தை உடலில்  பொடியை நன்றாகத் தேய்த்துக் குளிக்க வைக்கவும்.

Show comments

தொடர்பான செய்திகள்

குழந்தைகளுக்கு இயற்கை முறையில் கண் மை தயாரிப்பது எப்படி? | Organic Kajal for Newborn Baby.

குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஹார்லிக்ஸ் பவுடர் தயார் செய்வது எப்படி? | How to Make Horlicks at Home for Babies.

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்.. | Memory Power Increase Foods in Tamil.

இரட்டை குழந்தைகள் பிறக்க வேண்டுமா..? அப்ப இத செய்யுங்க..! | How To Conceive Twins.