காலையில் ஈஸியான ஒரு ரெசிபி உருளைக்கிழங்கு தோசை செய்வது எப்படி ?

தினமும் காலையில் ஒரு ஈஸியான மற்றும் சுவையான ஒரு ரெசிபி வரிசையில், இன்றைக்கு எந்த ரெசிபி. இன்றைக்கு ஒரு புதுவிதமான மற்றும் சுவையான காரசாரமான ஒரு ரெசிபி. தினமும் ஒரே உணவு செய்தால் யாருக்கும் பிடிக்காது. அதனால் ஒரு புதுவிதமான தோசை ரெசிபி செய்யலாம்.

✤ காலையில் சமையல் செய்ய நேரம் கிடைப்பது கடினம். அதனால் புதுவிதமான மற்றும் சில நிமிடங்களில்  ஒரு ரெசிபி செய்யலாம். இந்த பதிவில் காலையில் ஈஸியான ஒரு ரெசிபி உருளைக்கிழங்கு தோசை செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

✤ உருளைக் கிழங்கு – 6

✤ உப்பு – ஒரு சிட்டிகை

✤ கொத்தமல்லி – சிறிதளவு

✤ மிளகாய்த் தூள் – 2டேபிள்ஸ்பூன்

✤ அரிசிமாவு- 2கப்

✤ பூண்டு -10 பற்கள்

✤ எண்ணெய் – 3ஸ்பூன்

✤ வெங்காயம் -4

செய்முறை

✤ வெங்காயம் தோல் உரித்து அதைக் கழுவி, பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பூண்டு தோல் உரித்துக் கழுவ வேண்டும். அதை உரலில் வைத்து நன்றாகத் தட்டிக் கொள்ள வேண்டும்.

✤ ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கைச் சேர்த்து, அத்துடன் தண்ணீர் சேர்த்து நன்றாக இரண்டு அல்லது மூன்று முறை கழுவ வேண்டும். அதற்குப் பின், அதில் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

✤ வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்து சூடாக இருந்தால் ஆற வைக்க வேண்டும். ஆற வைத்த பிறகு, அதன் மேல் தோல் உரிக்க வேண்டும். தோல் உரித்த பிறகு, அந்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து, ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் உரலில் தட்டிய பூண்டைச் சேர்த்துக் கொள்ளவும்.

✤ கொத்தமல்லி தலையை நன்றாகக் கழுவி பொடிப் பொடியாக நறுக்கி அதில் சேர்க்க வேண்டும். அத்துடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

✤ அதில் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

✤ அதில் இரண்டு கப் அளவிற்கு அரிசிமாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அதை நன்றாகத் தோசை மாவு பதத்திற்குக் கலக்க வேண்டும்.

✤ அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடான பின், அதில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தேய்த்து இந்த தோசை மாவை ஊற்றிச் சுற்றி எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சூடான மற்றும் சுவையான காரமான உருளைக்கிழங்கு தோசை தயார்.

✤ இதற்குச் சட்னி அல்லது தக்காளி சாஸ் சேர்த்துச் சாப்பிடலாம். 10 நிமிடங்களில் ஒரு சுவையான உருளைக்கிழங்கு தோசை ரெசிபி தயார்.

Show comments

தொடர்பான செய்திகள்

எளிமையான முறையில் வயிற்றை சுத்தம் செய்வது எப்படி? | Vayiru Sutham Seivathu Eppadi .

ஓணம் ஸ்பெஷல்.. சுவையான மலபார் அவியல் செய்வது எப்படி? | Malabar Avial Recipe in Tamil.

ஓணம் சத்யா விருந்தில் இடம்பெறும் 27 வகையான உணவுகள்.. | Onam Sadhya Items List in Tamil.

அரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாம போச்சே.. | Rice Water Benefits in Tamil.