Nokia-வின் புதிய அவதாரம்...60 ஆண்டு பழமையான லோகோ மாற்றம் | Nokia Logo change News in Tamil

பின்லாந் நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு உருவான நோக்கியா நிறுவனம், உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்ந்து வந்தது. 90-களில் உலகில் அனைவரின் வீட்டிலும் இருந்தது நோக்கியா செல்போன் தான். பின்னர் அதிகப்படியான மக்கள் செல்போன் பயன்படுத்த தொடங்கியதால் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கால் பதித்தனர். அவர்களுடன் போட்டியிட முடியாமல் பொருளாதாரம் மற்றும் சந்தையிலும் பின்னடைவை சந்தித்தது நோக்கியா நிறுவனம்.

இதனால் பொருளாதார சந்தையில் முன்னேற்ற அடைய நோக்கியா நிறுவனம் மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் பயன்படுத்தி வந்த தங்கள் நிறுவனத்தின் லோகோவை மாற்றியுள்ளனர். நோக்கியா என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நீல நிறத்தில் இறந்தபிஉ கைகள் கோர்த்து பேக்ரவுண்டில் இசை ஒன்று வருவது தான். ஆனால் தற்போது வெவேறு வடிவங்களில் நோக்கியா என்ற எழுத்து மட்டுமே தெரிகிறது. மக்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புதிய வளர்சிக்கான இவர்களின் முயற்சி வெற்றி பெறுமா, சந்தையில் தங்களுடைய இடத்தை பிடிப்பார்களா, மக்களுக்கு ஏற்றார் போல சாதனங்களை தயாரிப்பார்களா என்பதை அவர்களின் முயற்சியில் பார்க்கலாம்.

Show comments

தொடர்பான செய்திகள்

அட்டகாசமான அம்சங்களுடன் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன்! | iQOO 12 5G Launched in India.

நவம்பர் மாதத்தில் அறிமுகமாகும் சூப்பர் 5ஜி மொபைல்கள் | Upcoming Smartphones in November.

அட்டகாசமான அம்சங்களுடன் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன்! | OnePlus Open Launched in India.

அசத்தலான அம்சங்கள்...எதிர்பார்க்காத பட்ஜெட்டில்...எந்த பிராண்ட் தெரியுமா? | Itel S23 Plus Launch Date in India.