மனதை மயக்கும் குளு குளு மணாலி.. | Best Places to Visit in Manali

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மிகவும் பிரபலாமான மலைத்தலங்களில் ஒன்று தான் மணாலி. பனிப்பொழிவு காலங்களில் இயற்கை அழகை ரசிப்பதற்காக பனிப்பொழிவு நிறைந்த இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புவது வழக்கம். அப்படி பலரையும் வசீகரித்த இடமாக இந்த மணாலி விளங்குகிறது. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மணாலியில்? வாங்க பார்க்கலாம்.

மணாலி:

மனதை மயக்கும் இயற்கை அழகும், வண்ணமயமான மலர்த்தோட்டங்களும், பனி மூடிய மலைகளுக்கு நடுவே பசுமைப் போர்த்திய மலைகளும் நிறைந்த இந்த மணாலிக்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தருவார்கள். டிரெக்கிங், கேம்பிங், ஆங்கிலிங், ரிவர் ராப்டிங், ஸ்கீயிங் போன்ற குளிர்கால விளையாட்டுகளுக்கு பெயர்போன மணாலியை முழுமையாக சுற்றி பார்க்கவே 4 லிருந்து 5 நாட்கள் தேவைப்படும். செழிப்பான கலாச்சாரம் மற்றும் புனித யாத்திரைகளுக்கு புகழ்பெற்ற இந்த மணாலியில் நாம் சுற்றி பார்க்க நிறைய சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

மணாலியில் பார்க்க வேண்டிய இடங்கள்:

சோலாங் பள்ளத்தாக்கு | Solang Valley

கடல் மட்டத்திலிருந்து சுமார் 8400 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு, கோடைக் காலங்களில் சர்ப்பிங் மற்றும் பாராகிளைன்டிங் செய்ய ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். கேபிள் காரில் ஏறி இமயமலையின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்கலாம். 

ரஹாலா நீர்வீழ்ச்சி | Rahala Waterfall

மணாலி நகரத்திலிருந்து 27 கிமீ தொலைவில் 2501 மீ உயரத்தில் அமைந்துள்ளது இந்த ரஹாலா நீர்வீழ்ச்சி. இமயமலையில் இருக்கும் உருகும் பனிப்பாறையில் இருந்து வரும் தண்ணீரே நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இது ஒரு பிரபலமான பிக்னிக் ஸ்பாட் மற்றும் ஓய்வெடுப்பதற்கான சரியான இடமாகவும் விளங்குகிறது. வியாச முனிவர் தியானம் செய்ய இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததாகவும் நம்பப்படுகிறது.

ஜோகினி நீர்வீழ்ச்சி | Jogini Waterfall

இந்த நீர்வீழ்ச்சியானது மணாலியிலிருந்து 3 கிமீ தொலைவிலும் வசிஷ்டர் கோயிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் பியாஸ் நதி மற்றும் ரோஹ்தான்கின் பனி மூடிய சிகரங்களின் அழகை கண்டு ரசிக்கலாம். முக்கியமான யாத்திரை தளமாகவும் ஜோகினி விளங்குகிறது. 

ஹிடிம்பா கோயில் | Hadimba Devi Temple

1553 ஆம் ஆண்டு மகாராஜா பகதூர் சிங் என்பவரால் கட்டப்பட்ட இந்த ஹிடிம்பா தேவி கோயிலானது 'தூங்காரி கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் பீமனின் மனைவியான ஹிடிம்பா தேவி மூலவராக அருள்பாலிக்கிறார். இந்த கோயிலானது முழுக்க முழுக்க மரத்தால் கட்டப்பட்டவை, இதுவே இக்கோயிலின் தனித்துவம்.

ஹிமாலயன் நிங்மாபா புத்த கோவில் | Himalaya Nyingmapa Buddhist Temple

வட இந்தியாவில் அமைந்துள்ள புத்த மடாலாயங்களில் பிரபலமான ஒன்றாக இந்த ஹிமாலயன் நிங்மாபா கோம்பா புத்த மடாலயம் திகழ்கிறது. இதன் கட்டிடக்கலையின் அழகிற்காகை ரசிப்பதற்காவும், சுற்றுச்சூழலின் அமைதிக்காகவுமே ஏராளனமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

பிருகு ஏரி | Bhrigu Lake

மணாலியிலிருந்து 40 கி.மீ.தொலைவில் குலூ மாவட்டத்தில் அமைந்துள்ள உயரமான ஏரி தான் பிருகு ஏரி. புகழ்பெற்ற துறவி மகரிஷி பிருகு ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்த இடம் என்று அறியப்படுகிறது. இந்த ஏரியின் சிறப்பம்சமே ஒவ்வொரு பருவத்திலும் அதன் நிறத்தை மாற்றிக்கொள்ளுமாம். அதாவது, கோடையில் நீல நிறமாகவும், கோடையின் பிற்பகுதியில் மரகத பச்சை நிறமாகவும் மாறும்.

கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்கா | Great Himalayan National Park

இந்த பூங்காவில் 1000க்கும் மேற்பட்ட தாவரங்கள், 209 பறவை இனங்கள், 31 பாலூட்டி இனங்கள், 12 ஊர்வன மற்றும் 125 பூச்சிகள் உட்பட பல அரிய வகை உயிரினங்கள் இருக்கின்றன. இங்கு வெப்ப நிலையானது மைனஸ் 4.4 டிகிரி செல்சியஸ் ஆக இருக்குமாம். பார்வையாளர்கள் செல்லவும் கேமராவுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். ஏப்ரல் - ஜூன் மற்றும் செப்டம்பர் - நவம்பர் ஆகியவை இங்கு செல்ல ஏற்ற மாதங்களாகும்.

Show comments

தொடர்பான செய்திகள்

ஹைதராபாத் வொண்டர்லால இப்படி ஒரு ஸ்பெஷலா.? இது தெரியாம போச்சே.! | Hyderabad Wonderla.

சூப்பரான கோடைக் கொண்டாட்டத்திற்கு பெங்களூர் வொண்டர்லா தான்..! | Wonderla Bangalore.

குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் இடத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் | Places to Visit in Delhi.

2022 Top 10 Tourist Places | மக்கள் அதிகம் சென்ற டாப் 10 பிரபல சுற்றுலாத் தளங்கள்.