Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 80,438.40
-568.21sensex(-0.70%)
நிஃப்டி24,586.25
-163.60sensex(-0.66%)
USD
81.57
Exclusive

June Month Rasi Palan 2022 in Tamil: தொழிலில் அதிக கவனத்தைக் காட்ட வேண்டிய ராசிகள் இதுவா...! ஜூன் மாத ராசிபலன்..!  

Manoj Krishnamoorthi June 01, 2022 & 06:00 [IST]
June Month Rasi Palan 2022 in Tamil: தொழிலில் அதிக கவனத்தைக் காட்ட வேண்டிய ராசிகள் இதுவா...! ஜூன் மாத ராசிபலன்..!  Representative Image.

ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை மாறுதல் சாமானியமே அந்த வகையில்  இந்த மாதம் ஜூன் தொடக்கத்தில் சனி பகவான் வக்கிர பெயர்ச்சி கும்பத்தில் இருப்பது போன்ற கிரக நிலை மாற்றத்தால் இறுதி 3 ராசிகளான மகரம், கும்பம் மற்றும் மீனம் பெறும் பலன்கள் (June Month Rasi Palan 2022 in Tamil) பற்றி அறிய மேற்கொண்டு பின்தொடரவும்.


இதையும் படிக்க: June Month Rasi Palan 2022: துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ஜூன் மாத ராசிபலன் பற்றி முழுமையாக அறிய இங்கு க்ளிக்  செய்யவும்.


மகரம்

பொது பலன்: சிறந்த அறிவாற்றலுக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இந்த 2022ன் ஜூன் மாதம் எதிர்பார்க்க முடியாத பண வரவு அளிக்கும். மனதில் அவ்வப்போது சில குழப்பங்கள் வந்துபோகும். தேவையற்ற பேச்சு நேர விரைய செல்வ விரையத்தைத் தரும். வியாபாரத்தில் சில அலைச்சல் இருக்கும், ஆனால் லாப நிலையில் பாதிப்பு இருக்காது. திருமண  வாழ்க்கையில் கருத்து வேறுபாடு இருக்கும்.

கல்வி நிலை நன்றாக உள்ளது, நல்ல மதிப்பெண் பெற்று புகழின் உச்சத்தில் திளைப்பர். ஆரோக்கியத்தில் திடீரென பிரச்சனைகள் வரும், முக்கியமாக உணவு முறையில் அக்கறை காட்ட வேண்டும்.

  உத்திராடம்: விடாமுயற்சி தேவைப்படும், குடும்ப செலவுகள் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்.  

திருவோணம்: இந்த மாதம் தொழில் வளர்ச்சி கணிசமாக இருந்தாலும், வியாபாரத்திற்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். நிதானமான பேச்சு வியாபாரத்தில் நன்மை அளிக்கும்.

அவிட்டம்: கணவன் மனைவி உறவில் சில வாக்குவாதங்கள் வரும், குடும்பத்தின் ஒற்றுமையில் சிறிய விரிசல் ஏற்படும். உறவினர் வருகை செலவை அதிகப்படுத்தும், மனதில் ஆனந்தத்தை உருவாக்கும். ஆரோக்கியக் குறை ஏற்படும். 

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

பரிகாரம்: வாரந்தோறும் சனிக்கிழமையில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம்  கருப்பு நிற ஆடை படைத்து வணங்க வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 26, 27

கும்பம்

பொது பலன்: உங்கள் சாதுரியமான மனநிலை இந்த மாதம் அதிகமாக தேவைப்படும் தினமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் தொழில் ஸ்தானம் மந்தமாக இருக்கும், ஆனால் செல்வ நிலைக்கு பாதிப்பு இல்லை.

மாணவர்களின் கல்வி அறிவு சற்று மந்தமாக இருக்கும், இந்த ஜூன் மாதம்  தொழில் ஸ்தானத்தைப் பொருத்தவரை தன்னம்பிக்கை அதிகமாகத் தேவைப்படும் தருணமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை ஓரளவு நன்றாக உள்ளது,குடும்பத்தினரின் ஆதரவு அதிகமாக இந்த மாதம் தேவைப்படும். இரத்த சொந்தத்தினால் சில சங்கடங்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் தேவைப்படும்.

சதயம்: தொழில் வளர்ச்சி அவ்வளவு நன்றாக இருக்காது, மந்தமான நிலையில் தொழில் இருக்கும். சிலருக்கு தொழில் மாற்றம் ஏற்படும். உடல்நலத்தில் சிறிய கோளாறு உருவாகும்.

அவிட்டம்: பண வரவு கணிசமாக இருக்கும், ஆனால் பயணம் செய்யும் நிலை இருப்பதால் வரவுக்கு செலவுகள் சரிவர இருக்கும். வழக்கமான காரியத்தில் கால தாமதம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

பூரட்டாதி: திருமண உறவில் சில மன வருத்தங்கள் தோன்றும், வெளிப்படையான பேச்சு வீண் சிக்கலை உருவாக்கும். சாமர்த்தியமான நடவடிக்கை லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: திருமால்

பரிகாரம்: வாரந்தோறும் சனிக்கிழமை அன்று பெருமாள் தரிசனம் பெறுவது, தீமையிலிருந்து விடுபடத் தூண்டும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 3, 28,29,30 

மீனம்

பொது பலன்: ஆசைப்பட்ட வாழ்க்கைக்காக இடைவிடாது உழைக்கும் குணம் கொண்ட மீன ராசிக்காரரே, உங்களுக்கு வேலைச்சுமை அதிகமாக இருக்கும். அதிக உழைப்பதால் நல்ல லாபம் பார்க்க முடியும். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும், உடல் சோர்வாக இருக்கும். நல்ல ஓய்வு சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கும்.

பூரட்டாதி: தொழில் பிரச்சனைகள் குறைந்து, முன்னேற்றம் அடையும் தருணமாக இந்த ஜூன் மாதம் அமையும்.

உத்திரட்டாதி: உறவினர் மூலம் சில பிரச்சனைகள் தோன்றும்,எனவே யாருக்காகவும் பரிந்து பேச வேண்டாம். உத்தியோகத்தில் அதீத கவனம் தேவை.

ரேவதி: இந்த மாதம் நீங்கள் நிதானமாக இருப்பது, தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும். 

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று விநாயகருக்கு தண்ணீர் ஊற்றி வணங்க வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 4, 5  


மேலும் படிக்க: June Month Rasi Palan: குழப்பமான மன நிலையில் இருக்கும் அந்த ராசிக்காரர்  நீங்களா....!  ஜீன் மாத ராசிபலன் 2022 முதல் பாதியை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்