Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 80,438.40
-568.21sensex(-0.70%)
நிஃப்டி24,586.25
-163.60sensex(-0.66%)
USD
81.57
Exclusive

June Month Rasi Palan 2022: செல்வ செழிப்போடு இந்த மாதம் செழிப்பான வாழ்க்கை வாழும் அந்த 3 ராசிக்காரர் இவர்களா…! ஜூன் மாத ராசிபலன்!

Manoj Krishnamoorthi May 31, 2022 & 19:30 [IST]
June Month Rasi Palan 2022: செல்வ செழிப்போடு இந்த மாதம் செழிப்பான வாழ்க்கை வாழும் அந்த 3 ராசிக்காரர் இவர்களா…! ஜூன் மாத ராசிபலன்!Representative Image.

ஜோதிடத்தைப் பொருத்தவரை கிரக நிலை மாற்றமே ராசிகளின் நிலையை மாற்றும், அந்த கிரக நிலையை மையப்படுத்தி ராசிகளின் பலன் அமையும். சனியின் வக்கிர திசை ஜூன் 5 ஆம் தேதி வருவதால் அனைத்து ராசியிலும் சில கிரக நிலை மாற்றம் நிலவுகிறது, இந்த மாற்றத்தால் ஜூன் மாதம் துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்கு என்ன மாதிரியான பலன் என்பதை அறிய இவ்வாசகத்தைப் பின்தொடரவும். 


அதிகமாக படிப்பவை: June Month Rasi Palan 2022 in Tamil: கடகம், சிம்மம், கன்னி ராசியின் ஜூன் மாத ராசிபலன்! பற்றி அறிய இங்குக்ளிக் செய்யவும்.


துலாம்

பொது பலன்:  வாழ்வில் நேர்மையாக இருந்தால் எந்த மாதிரியான கஷ்டத்தையும் சமாளிக்கும் தைரியம் தோன்றும் என்பதை உணர்ந்த உங்களுக்கு இந்த மாதம் செல்வ வரவு அதிகமாக இருக்கும். இறைப் பணியில் நாட்டம் ஏற்பட்டு சிலர் ஆன்மீகத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வர். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். 

குடும்ப  வாழ்க்கையில் ஒற்றுமை அதிகரிக்கும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். உறவினர் மத்தியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் பிரச்சனை உருவாகும். மானவர்கள் ஆசிரியரிடம் நல்ல மதிப்பைப் பெறும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது பொறுமையாக இருப்பது பொருள் சேதத்தை உருவாக்காது. உடல்நலத்தில் பிரச்சனை இல்லை.

சித்திரை: நன்மைகள் அதிகமாகக் கிடைக்கும், ஆரோக்கியம் மேம்படும். தொழில் லாபம் அமோகமாக இருக்கும்.

சுவாதி: தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும்.

விசாகம்: குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பீர்கள். ஓய்வு நேரம் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள்.   

வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை அம்மன்

பரிகாரம்: குடும்பத்தில் நிம்மதி அதிகமாக அமாவாசை தினத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 26, 27 

விருச்சிகம்

பொது பலன்:  சுயநலமற்ற குணத்துக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இந்த ஜூன் மாதம் நல்ல பலன் பலவற்றை அளிக்கும், வழக்கு பிரச்சனை அல்லது பிரகுப் செய்யலாம் எனக் கிடப்பில் வைத்த காரியங்களை மீண்டும் முயற்சிக்கும் எண்ணம் துளிர்விடும், எடுக்கும் முயற்சியில் வெற்றி காணும் வரை ஓயமாட்டீர்கள்.  தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, பண வரவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முழுமூச்சுடன் வேலை செய்து பாராட்டு பெறுவீர்கள்.

குடும்ப வாழ்க்கை நன்றாக உள்ளது, விருச்சிக ராசிக்காரரின் வீட்டில் சுபகாரியம் நடக்கும் தருணம் உருவாகும். திருமண வாழ்க்கை அமோகமாக உள்ளது.  குழந்தையில்லாமல் குழந்தைக்காகக் காத்திருந்த விருச்சிக ராசிக்காரருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வ நிலை மிகவும் சிறப்பாக உள்ளது. நட்பு வட்டாரத்தின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.  மேலும் கல்வி ஸ்தானத்தில் பிரச்சனை இல்லை, மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் தேவை.   

விசாகம்: இந்த மாதம் கிடைக்கும் அதிகமான பண வரவு, சில பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு வழக்கத்தைவிட சாதகமான நிலை இருக்கும்.

கேட்டை: வியாபாரத்தில் உங்கள் பேச்சு நல்ல பலனை அளிக்கும், வாடிக்கையாளரின் மதிப்பைப் பெறுவீர்கள். மனதிற்கு விருப்பமானவர்களுடன் ஆனந்தமாக இருக்கும் சூழல் அதிகமாக அமையும்.

அனுஷம்: உங்கள் பேச்சாற்றல்  தொழிலில் நல்ல முன்னேற்றத்தை உருவாகும், பண வரவு கணிசமாக இருக்கும்.  திருமண வாழ்வில் உங்கள் நடவடிக்கை சாதகமாக இருக்கும், அவ்வப்போது சிறிய வாக்குவாதங்கள் தோன்றும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன்

பரிகாரம்: உங்கள் குலதெய்வ கோவிலில் பாலபிஷேகம் செய்து, அன்னதானம் செய்தல் வேண்டும். 

சந்திராஷ்டமம்: ஜூன் 1, 2,  28,  29, 30

தனுசு

பொது பலன்:  உங்கள் உறுதியான குணத்துக்கு தேவையான வெற்றியை இந்த மாதம் கலவையான பலன்கள் இருக்கும், வேலையிடத்தில் உங்கள் பொறுமையான குணம் நல்ல ரிசல்ட் அளிக்கும். வியாபாரத்தில் மிதமான வளர்ச்சி இருக்கும், கூட்டு வியாபாரம்  செய்பருக்கு எதிர்பார்த்த லாபம் இல்லை என்றாலும், ஓரளவு பண வரவு இருக்கும். மொத்தத்தில் தொழில் ஸ்தானம் ஏற்ற இறக்கமாக அமையும். நிதி நிலையில் வரவும் செலவும் மாறி மாறி இருக்கும்.  

மாணவர்களின் கல்வி ஸ்தானத்தில் கல்வி கற்கும் ஆற்றல் அதிகமாகி ஆர்வத்துடன் படிப்பர். உங்கள் 12 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பது காதல் வாழ்க்கையில் எதிர்பார்க்காத பல நற்பலனைத் தரும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது. உடல்நலத்தைப் பொறுத்தவரை 6 ஆம் வீட்டில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கை இருப்பதால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தோன்றும்.  

மூலம்: உங்கள் மதிப்பு கூடும், பொதுகாரியத்தில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் திருப்திகரமான பண வரவு இருக்கும்.

பூராடம்: தொழில் போட்டிகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தைவிட்டு தொலைதூர பயணம் செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

உத்திராடம்: தொழில் மாற்றம் இருக்கும், வியாபாரம் லாபம் அளிக்கும். உடல்நலத்தில் அக்கரை காட்ட வேண்டும். நல்ல வேலையை எதிர்பார்த்த விருச்சிக ராசிக்காரருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  தட்சண மூர்த்தி 

பரிகாரம்: ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி  அர்ச்சனை செய்தல் நன்மை ஆகும். 

சந்திராஷ்டமம்: ஜூன் 4, 5


மேலும் படிக்க: மகரம், கும்பம், மீன ராசியின் ஜூன் மாத ராசிபலன்..! பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்