Wed ,Oct 30, 2024

சென்செக்ஸ் 79,942.18
-426.85sensex(-0.53%)
நிஃப்டி24,340.85
-126.00sensex(-0.51%)
USD
81.57
Exclusive

Bank Holidays: பிப்ரவரியில் வங்கிகளுக்கு விடுமுறை!!

Mohanapriya Arumugam January 29, 2022 & 16:39 [IST]
Bank Holidays: பிப்ரவரியில் வங்கிகளுக்கு விடுமுறை!!Representative Image.

2022 ஆம் ஆண்டிற்க்கான வங்கி விடுமுறை விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் சில வாரங்களுக்கு முன்பே வெளியிட்டது. வரும் பிப்ரவரி மாதத்தில், அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, மாநில வாரியாக விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறை நாட்களில் வார இறுதி நாட்களும், அரசு விடுமுறை நாட்களும் அடங்கும். இதன் அடிப்படையில் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். 

மாநில வாரியான விடுமுறைகள்

வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி, வசந்த பஞ்சமியை முன்னிட்டு, திரிபுரா மாநிலத்தின் அகர்தலா, ஓடிச மாநிலத்தின் புவனேஸ்வர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிப்ரவரி 16 அன்று, சண்டிகரில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு பிப்ரவரி 19 அன்று, மகாராஷ்டிரா மாநில நகரங்களான மும்பை மற்றும் நாக்பூரில், அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தேதி

விடுமுறை காரணம்

பிப்ரவரி 2

சோனம் லோச்சார் (கேங்டாக்)

பிப்ரவரி 5

சரஸ்வதி பூஜை/ ஸ்ரீ பஞ்சமி/ஸ்ரீ பஞ்சமி பசந்த் பஞ்சமி (அகர்தலா, புவனேஸ்வர், கொல்கத்தா)

பிப்ரவரி 6

ஞாயிறு

பிப்ரவரி 12

மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை

பிப்ரவரி 16

ஞாயிறு

பிப்ரவரி 16

முகமது ஹஸ்ரத் அலி பிறந்தநாள்/லூயிஸ்-நாகை-நி (மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரம்; உத்தரப் பிரதேசத்த மாநிலத்தின் உள்ள கான்பூர் மற்றும் லக்னோ நகரங்கள்), 

பிப்ரவரி 16

குரு ரவிதாஸ் ஜெயந்தி (சண்டிகர்)

பிப்ரவரி 18

டோல்ஜத்ரா (கொல்கத்தா)

பிப்ரவரி 19

சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர்)

பிப்ரவரி 20

ஞாயிறு

பிப்ரவரி 26

மாதத்தின் நான்காவது சனிக்கிழமை

பிப்ரவரி 27

ஞாயிறு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்