பணத்தை டெபாசிட் செய்து வட்டி மூலமாக அதிக லாபம் ஈட்டும் திட்டமாக Fixed Deposit (நிலையான வைப்புத் திட்டம்) திட்டமாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி வங்கிகளிலும் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், வங்களை பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுகின்றன.
இனி ஒரு வங்கியில் நீங்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் அதன் வட்டி விகிதம் எவ்வளவு என்று மற்ற வங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து முதலீடு செய்யுங்கள்.
பல்வேறு காலங்களுக்கு Fixed Deposit திட்டங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை. குறுகிய கால டெபாசிட்டுகளை பொறுத்தவரை 7 முதல் ஒரு ஆண்டு வரை கிடைக்கின்றன. இந்த குறுகிய காலத்திலும் நல்ல வட்டியை சில வங்கிகள் வழங்குகின்றன.
ஒரு வருடத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்:
ஆர்பிஎல் பேங்க் - 6% (RBL Bank)
இண்டஸ்இண்ட் பேங்க் - 6% (IndusInd Bank)
டிசிபி பேங்க் - 5.55% (DCB Bank)
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் - 5.25% (IDFC First Bank)
பந்தன் பேங்க் 5.25% (Bandhan Bank)
சீனியர் சிட்டிசன்களுக்கான ஒரு வருட Fixed Deposit வட்டி:
ஆர்பிஎல் பேங்க் - 6.5%
டிசிபி பேங்க் - 6.05%
இண்டஸ்இண்ட் பேங்க் - 6.5%
பந்தன் பேங்க் - 6%
ஆக்ஸிஸ் பேங்க் - 5.75%
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…