Basic Objective of Financial Management: பணம் இல்லையென்றால் வாழ்ந்து விடலாம் என்று ஒரு சிலர் கூறுவர். பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்றும் ஒரு சிலர் கூறுவர். இந்த இரண்டில் நீங்கள் எதை ஏற்றுக் கொள்வீர்கள். சந்தேகமா இருக்குமே? எது எடுப்பதென தெரியாமல் உள்ளீர்களா?. அதே போல தான், எங்களுக்கும். ஆனால், இதில் முக்கியமாக நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை என்ன தெரியுமா?
நாம் வாழ்வதற்கு ஏற்ற பணத்தை சம்பாதித்தால், நாம் எதற்கு பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும். ஆனால், சில பேர் வாங்கும் சம்பளத்தை வைத்து சமாளிக்க முடியாமல், பொருளாதாரத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஃபைனான்ஸ் நெருக்கடியைச் சந்திப்பவர்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க. உங்களுக்கு பணம் பிரச்சனையே இல்லாமல் போகும்.
செலவில் சேமியுங்கள்
“செலவுக்குப் பின் சேமிக்காதே
சேமித்த பின் செலவு செய்”
என்ற பழமொழியே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். எப்படினு கேக்குறீங்களா? இந்த கால கட்டத்தில், எல்லோர்க்கும் மனதில் தோன்றக்கூடிய ஒரு முதன்மை எண்ணம் பணம் தான். இப்போ எல்லாம், வேலைக்கு போனா நிறைய கற்றுக்கொள்ள முடியும்னு நினைக்கிறவங்கள விட வேலைக்குப் போனா நிறைய பணம் சம்பாதிக்கலாம்னு போறவங்க தான் அதிகம்.
எப்படி இருந்தாலும், சம்பளத்தின் ஒரு பகுதியைக் கூட சேர்த்து வைக்க முடியாத நிலை உருவாகும். அந்த சமயத்தில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன தெரியுமா? முதலில் நீங்கள் செலவிற்காக ஒதுக்கிய பணத்தை சேமித்து வைக்கப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் சேமித்து வைத்த பின்னர் கூட நீங்கள் செலவு செய்து கொள்ளலாம். எனவே, நாம் செலவு செய்வதற்காக சம்பாதிப்பதை விட்டுவிட்டு சேமிப்பதற்காக சம்பாதிக்க வேண்டும் (Functional Areas of Financial Management).
நிகழ்காலத்தை நம்பாதே
இந்த காலத்தில் பெரும்பாலானோர், நிறைய தேவையில்லாதவற்றிற்காக இருக்கும் பணத்தையும் வீணடித்து, பேங்கில் லோன் வாங்குவர். முக்கியமாக, தற்போது நம் கையில் வைத்திருக்கும் வேலையையும், சம்பளத்தையும் நம்பிக்கொண்டு, வருங்காலத்தில் லோன் கட்டி விடலாம் என்று எண்ணி நிறைய வங்கிகளில் லோன் பெறுவர். அதிலும் ஏன் நிறைய பேர், இன்றைய காலத்தில் நல்ல வேலை இருக்கிறது என்று எண்ணி, பிற்காலத்திற்காக லோன்களைப் பெற்று அவதிப்படுவர்.
திடீரென்று எதிர்பாராத விதமாக, நம் கையில் இருக்கும் வேலையும், இந்த சம்பளமும் கிடைக்காத போது, அந்த நேரத்தில் நாம் கட்ட வேண்டிய லோனுக்கும் என்ன செய்வோம். அதனால், எதையும் சிந்திக்காமல், நிகழ்காலத்தை நம்பி வருங்காலத்திற்காக செலவு செய்தல் கூடாது. எதை செய்வதற்காக லோன் வாங்க நினைக்கிறாயோ, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான பணத்தை சேமித்த பின், அதனை செய்யத் தொடங்கு.
தெரியாதவற்றில் இறங்காதே
பணத்தை எப்படி வேணாலும் சம்பாதிக்கலாம் என்பதற்குப் பதில் இப்படித்தான் சம்பாதிக்க வேண்டும் என்பதற்கு நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். அதற்காக தெரியாத விஷயத்தில் தலையை விடுவது புலியின் வாயில் தானாக தலையை விடுவது போன்றது. எந்தவொரு காரியத்திலும், அதனைப் பற்றி முழுதாக அறிந்த பின்பு மட்டுமே, அதில் நுழைய வேண்டும்.
எந்த வித முன் அனுபவமும் இல்லாமல், அதனைப் பற்றி முழு விவரங்களையும் தெரியாமல், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு விழுவது எதிர்பாராத விளைவை சந்திக்க நேரிடும். ஒரு தொழில் நீங்கள் ஸ்டார்ட் செய்கிறீர்கள் என்றால், ஒன்று அந்தத் தொழிலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், தொழிலைப் பற்றிய முழு விவரங்களைப் பற்றி ஆராய்ந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல், நாம் முதலீடு செய்தால் நாம் பணத்தை இழப்பதற்கான நிலை உருவாகும்.
ஷேர் மார்க்கெட்ல நஷ்டமா?
இப்போ யார பார்த்தாலும், ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணிருக்கன். நான் இந்த கம்பெனியோட ஷேர் ஹோல்டர் என்று கூறுவர். ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணா பணம் அதிகமாக கிடைக்கும்னு சொல்லி, பணம் சம்பாதிக்க ஷேர் மார்க்கெட் பற்றித் தெரியாமயே அதில் இன்வெஸ்ட் பண்ணுவாங்க.
முதலில் ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ண எல்லாரும் பணத்தை இழக்கிறதும் அல்ல. பெறுவதும் அல்ல. ஷேர் மார்க்கெட் பிஸினஸ் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்த பின்னரே, அதில் இன்வெஸ்ட் பண்ண வேண்டும். அதைப்பற்றி எதுவும் தெரியாமல் இன்வெஸ்ட் செய்தால், பணத்தை இழக்க நேரிடும். இதில் இன்வெஸ்ட் பண்ண நினைப்பவர்கள் முதலில், ஷேர் மார்க்கெட் பிஸினஸ்னா என்ன? அதில் உள்ள வகைகள்? அதை எவ்வாறு பயன்படுத்தலாம்? போன்ற கேள்விக்கான பதில்கள் தெரிந்திருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பற்றிய முழு அத்தியாயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தகுதியை மேம்படுத்திக் கொள்ளுதல்
நாம் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு விஷயமும் நமக்கு தற்காலிகம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். ஏனெனில், நாம் ஈடுபட்டுள்ள தொழில் நிரந்தரமல்லாத சமயத்தில் எப்போது வேணாலும், அது இல்லாத போவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இதனால், நாம் ஒரு தொழிலில் இருக்கும் போதே, நாம் அதற்கான தகுதிகளை வளர்த்திக் கொள்ள வேண்டும்.
தற்போது உள்ள நிலையில், ஸ்டார்ட் அப்கள் உருவாகி நிறைய பிசினஸ் ஓடிக் கொண்டிருக்கின்றன. போட்டி போட்டுத் தொழில் செய்து, முன்னிலையில் இருப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நாம் ஒரு வேலையை மட்டும் நம்புவது கூடாது (Financial and Strategic Management). இனி வரும் காலங்களில் நம்முடைய தொழில் நம் கையை விட்டுப் போனாலும், நம்முடைய தகுதி நம்மைக் காப்பாற்றும். இதனால், நாளுக்கு நாள் தொழில் ரீதியான அறிவை வளர்த்துக் கொண்டு அதற்கான தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
பகுதி நேர வேலை
பகுதி நேரத்தில் வேலை செய்வதன் மூலம் சம்பாதிக்க முடியும் என்று நினைப்பது சரியா? கொஞ்சம் டௌப்ட் தான். ஆமாங்க. பகுதி நேரம் வேலை என்பது முழு நேர வேலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். முழு நேரத்தில் நீங்கள் செய்யும் வேலையை மையமாகக் கொண்டு பகுதி நேரத்தில் செய்யப்படும் வேலை அமையும். முழு நேரத்தில் செய்யும் வேலையில் தகுதியை உயர்த்திக் கொண்டு வருமானம் ஈட்டலாம். அல்லது பகுதி நேரத்தில் செய்யப்படும் வேலையின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டலாம்.
இதில் முழு மற்றும் பாதி நேரத்தில் செய்யப்படும் வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தேவையான அளவு செலவு செய்து, மீதியை சேமித்து வைக்க வேண்டும். இதன் மூலம், நமக்கு ஏற்படும் நிதி நெருக்கடியிலிருந்துத் தப்பிக்கலாம்.
கடனை ஒழி
கடன் அன்பை முறிக்கும்னு சொல்லுவாங்க. அது பேச்சு வழக்கு மட்டுமல்ல. செயலிலும் நன்றாக செயல்படுகிறது. நிதி நெருக்கடி பெரும்பாலும் கடன் தொல்லையால் வருகிறது. கடனுக்கு வட்டி என அதிக அளவிலான நிதி சிக்கல்கள் ஏற்படும். ஒருவரிடம் வாங்கிய கடனை அடைப்பதற்கு, மற்றொருவரிடம் கடன் வாங்குவோம் (Basic Objective of Financial Management). இதனால், வாழ்க்கை முழுக்க கடன் தேவையிலேயே நாம் இருப்போம்.
இதில் இப்போ ட்ரென்டா இருப்பது கிரெடிட் கார்டு. கிரெடிட் கார்டு வாங்கிக்கோங்கனு பேங்க்ல இருந்து வேணாம் வேணாம்னு சொன்னாலும் தருவாங்க. ஆனால், கிரெடிட் கார்டு கொடுத்த அப்புறம் கடன் மேல கடனாகி நம்மால் கட்ட முடியாத நிலை உண்டாகும்.
பிற்காலத்திற்குச் சேமி
இப்போ நாம் சம்பாதிக்கும் அனைத்தையும் ஒரே நேரத்தில் செலவு செய்து, வயது முதிர்ந்த காலத்திலும் நாம் வேலைக்கு செல்வது என்பது முடியாத காரியம். இதனால், நாம் வருமானம் ஈட்டும் காலத்திலேயே சரியான முறையில் செலவுகளைக் குறைத்து, பணத்தை சேமித்து பிற்காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சம்பாதிக்க சம்பாதிக்க செலவு செய்து கொண்டே இருப்பதை விட, நன்றாக சம்பாதிக்கும் காலத்தில் வருமானத்தை ஈட்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலம், பிற்காலத்தில் யாருடைய உதவியுமின்றி நாம் வருமானத்தை ஈட்ட முடியும்.
சொந்த வீட்டைப் பற்றிய கவலையா?
சிலர் சொந்த வீடு இல்லையே என வருந்துவர். எத்தனை கஷ்டப்பட்டாவது சொந்த வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்று நினைப்பர். அந்த அளவுக்கு அயராது உழைத்து சொந்த வீட்டைக் கட்டுவது என்பது தற்போதுள்ள கால கட்டத்தில் கொஞ்சம் கடினம் தான். விலைவாசி ஏறும் அளவிற்கு, நம் சம்பளம் ஏற வில்லையே. பிறகு எப்படி, நாம் சொந்த வீட்டைக் கட்டுவது (Functional Areas of Financial Management).
நம்மில் சிலர், சொந்த வீட்டைக் கட்டுவதற்கு தற்போது கையில் இருக்கும் வேலையை நம்பி, லோன் பெறுவர். இது சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் தான். தற்போதுள்ள நிலைமையை எண்ணி, கடன் வாங்கிய பிறகு, அந்தக் கடனைக் கட்ட முடியாத சூழல் வந்தால், மீண்டும் அந்த கடனிற்காக, கட்டிய வீட்டையே அடகுக்கு வைப்பர். இதனால், சொந்த வீடு கட்டுவதற்கான ஆசை இருந்தால், சற்று சிந்தித்து செயல்படுவது மிக நல்லது.
இன்ஷூரன்ஸின் பயன்கள்
இன்ஷூரன்ஸ் ஒரு தனி நபர் மட்டுமல்லாமல், அவரின் குடும்பத்தையே காப்பதற்கான திட்டமாக உள்ளது. எதிர்பாராத விதமாக, நமக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், நம்முடைய குடும்பத்தில் யார் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று எண்ணி அச்சுறுவோம் (Financial and Strategic Management). அத்தகைய கடுமையான சூழலில், இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளப்படுவதின் மூலம் நமக்கான செலவுகளை நாமே பார்த்துக் கொள்ள முடியும்.
மனிதனுக்கு எந்த சூழ்நிலையில் என்ன ஆகும் என்பது தெரியாத ஒன்று. எனவே, சரியான நிலையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.
இது போன்ற மேலும் பல வாழ்க்கைக்குத் தேவையானத் தகவல்களைப் பெற, நமது Search Around Web என்ற Tamil இணையதளபக்கத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…