Wed ,Oct 30, 2024

சென்செக்ஸ் 80,285.95
-83.08sensex(-0.10%)
நிஃப்டி24,455.70
-11.15sensex(-0.05%)
USD
81.57
Exclusive

Corporate Credit Card: வணிகத் தேவைகளுக்காக தனிப்பட்ட கடன் அட்டையைப் (Personal Credit Card) பயன்படுத்தலாமா?

Nandhinipriya Ganeshan February 19, 2022 & 09:30 [IST]
Corporate Credit Card: வணிகத் தேவைகளுக்காக தனிப்பட்ட கடன் அட்டையைப் (Personal Credit Card) பயன்படுத்தலாமா?Representative Image.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 1980 ஆம் ஆண்டு முதல் Credit Card ஐ அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், நாடு முழுவதும் கிரெடிட்  கார்டை (personal credit cards) பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. ஏனெனில் எளிமையான பயன்பாடு அவற்றை அதிகமாக பயன்படுத்த உதவியுள்ளது. 

ஒரு வேளை, நீங்கள் ஒரு வணிகத்தை நடத்தினால், ஒரு கார்ப்பரேட் கார்டை (corporate card) வாங்கிக் கொண்டு உங்கள் சொந்த மற்றும் வணிகச் செலவுகளைப் பிரித்துக்கொள்வது நல்லது. ஏன் என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Corporate Credit Card என்றால் என்ன?

 

 

கார்ப்பரேட் கிரெடிட் கார்டு என்பது ஒரு வணிகத்திற்கு வங்கியால் வழங்கப்படும் ஒரு வகை கடன் அட்டை ஆகும். இந்த கிரெடிட் கார்டை தான் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது முதலாளி அவர்களின் வணிகம் தொடர்பான செலவுகளுக்காக தங்கள் ஊழியர்களுக்கு வழங்குவார்கள்.  

இது எதற்காக என்றால் தனது வணிகம் சம்பந்தமான செலவுகளுக்கு முதலாளி அவர்களின் சொந்த பணத்தை பயன்படுத்த வேண்டியதிருக்காது. மேலும், அவ்வபோது ஆகும் மொத்த செலவுகளும் நிறுவனம் கிரெடிட் கார்டு வாங்கிய வங்கியின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். பின்னர், நிறுவனத்தின் உரிமையாளர் அந்த கடனைப் பொறுமையாக திருப்பி செலுத்திக் கொள்ளலாம். 

வணிகத்திற்காக (Business) ஏன் கார்ப்பரேட் கிரெடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டும்?

 

 

1. கடன் வரம்பு (Credit Limit)

கார்ப்பரேட் கிரெடிட் கார்டுகள் தனிப்பட்ட கார்டுகள் அல்லது வணிக கடன் அட்டைகளுடன் ஒப்பிடும்போது பயன்படுத்தும் அளவில் அதிக வரம்பைக் கொண்டுள்ளது. ஏனென்றால், கார்ப்பரேட் கார்டுகளின் கடன் வரம்பு (Credit Limit) என்பது ஒரு நிறுவனத்தின் சுயவிவரம் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. சில சமயங்களில் வணிகத்தின் வளர்ச்சியைப் பொறுத்து கடன் வரம்புகளில் மாற்றம் எற்படும். இது ஒரு விதத்தில் நன்மை தரும் விஷயம் ஆகும், ஏனெனில் தேவைகள் அதிகரிக்கும் போது, Credit Limit -ம் அதிகரிக்கிறது.

மறுபுறம், Personal Credit Card -ன் கடன் வரம்பு ஒரு நபரின் வருமானத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, வணிகம் மற்றும்  சொந்த செலவுகளை இரண்டாகப் பிரித்து பயன்படுத்துவதே சிறந்தது.

2. கிரெடிட் ஸ்கோர் (Credit Score)

Corporate Card நிறுவனத்தின் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவுகிறது. எதிர்காலத்தில் மலிவான மூலதனத்தைப் (Cheap Capital) பெற இது பெரிதும் உதவியாக இருக்கும். இது நிறுவனத்தின் கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பதற்கான எளிமையான மற்றும் ஆபத்து இல்லாத வழியும் கூட ஆகும்.

3. பொறுப்பு (Liability)

அதிக பரிவர்த்தனை மதிப்பு சம்பந்தப்பட்டிருப்பதால், ஒவ்வொரு வணிக உரிமையாளரும் வணிக பரிவர்த்தனைகள் தந்திரமானதாக இருக்கக்கூடும் என்பதை புரிந்துகொள்கிறார்கள். பின்னர், அத்தகைய சூழ்நிலை ஏற்படும் போது தனிப்பட்ட கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது தனிப்பட்ட கடன் வரம்பிற்கு ஆபத்தாக முடியும். ஆனால், ஒரு கார்ப்பரேட் கிரெடிட் கார்டுக்கு தனிநபர் மீது எந்தவித பொறுப்பும் இருக்காது. 

4. வரிச் சலுகை (Tax Benefit)

கார்ப்பரேட் கிரெடிட் கார்டிலிருந்து செலுத்தப்படும் அனைத்து வணிகச் செலவுகளையும் லாபம் மற்றும் நஷ்டக் கணக்கில் கோரலாம். அதேபோல் personal card users தனிப்பட்ட கட்டணங்களில் இருந்து வணிகக் கட்டணங்களைத் தனித் தனியாக பிரித்து கொள்வதன் மூலம் வரியைக் குறைத்துக் கொள்ளலாம். 

 

 

5. செலவின நிர்வாகம் (Expense Management)

ஒரு வணிகமாக, வணிகச் செலவுகள் மீது உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடும் தெரிவுநிலையும் இருக்கும். உங்கள் பணியாளரால் பயன்படுத்தப்படக்கூடிய பணத்தில் நீங்கள் அதிகபட்ச வரம்பை அமைக்கலாம், இது உங்கள் செலவுகளை நன்றாக நிர்வகிக்க உதவும். 

6. வணிகம் சார்ந்த போனஸ் மற்றும் ரிவார்ட்ஸ் (Bonuses and Rewards)

தனிப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ஷாப்பிங் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றில் ஒரு தனிநபருக்குக் குறிப்பிட்ட தனிப்பட்ட ரிவார்ட்ஸ் உள்ளன. ஆனால், வணிகக் கிரெடிட் கார்டுகள் விமான நிறுவனங்கள், ஹோட்டல் முன்பதிவுகள், வணிகச் சேவைகள் போன்றவற்றில் ரிவார்ட்ஸ் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகின்றன.

7.  Business Credit History 

நீங்கள் வணிக கடன்கள் (Business loans) அல்லது இயந்திரங்கள் (Machinery) மற்றும் உபகரண குத்தகைகளுக்கு (Equipment Leases) விண்ணப்பித்தால், Business Credit History முக்கியமான ஒன்று. உங்கள் வணிகச் செலவுகளை தனிப்பட்ட கிரெடிட் கார்டின் மூலம் செய்தால், அது தனிப்பட்ட செலவாகத்தான் கணக்கிடப்படும், வணிகச் செலவாக எடுத்துக்கொள்ளப்படாது. எனவே, வணிக கடன் வரலாற்றை உருவாக்க இது உதவாது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்