ஆறு மாதங்களாக பிட்காயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துவந்தது. இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு பிட்காயின் மதிப்பு 40,000 டாலரை எட்டியதால், இன்று கிரிப்டோ மார்கெட் பச்சைக் குறியீட்டுடன் தொடங்கியுள்ளது. இதனால், கிரிப்டோ முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, அதில் 30% வரி விதித்து கிரிப்டோகரன்சியை சட்டபூர்வமானதாக அறிவித்தது மத்திய அரசு. ஒருபுறம் வருத்தத்தை அளித்தாலும், மறுபுறம் கிரிப்டோவை சட்டபூர்வமானதாக மாற்றியது சிறு மகிழ்ச்சியை தந்தது.
இந்த அறிப்பிற்குப் பின்பு தான் கிரிப்டோகரன்சி மார்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கியுள்ளது. அதனால், நேற்று இரவிலிருந்து கிரிப்டோ மார்கெட்டின் முன்னணி காயினான பிட்காயின் 10% அதிகரித்து தற்போது 41,588.03 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து எதிரியம் 9.39 சதவீதமும், சொலானோ 9.33 சதவீதமும், எக்ஸ்.ஆர்.பி. காயின் 9.05 சதவீதமும் உயர்ந்து முறையே 3,029.74 டாலருக்கும், 116.93 டாலருக்கும், 0.6705 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
அதேப்போல், பைனான்ஸ் 13 சதவீதமும், கர்டானோ 9 சதவீதமும், டெரா 12 சதவீதமும், டோஜ்காயின் 7 சதவீதமும் உயர்ந்து முறையே 427.55 டாலருக்கும், 1.17 டாலருக்கும், 57.31 டாலருக்கும், 0.1493 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த உயர்வானது கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…