Current Account vs Saving Account In India: பேங்கில் இரண்டு விதத்தில் பணத்தை போடலாம். ஒன்று சேமிப்புக் கணக்கு மற்றொன்று நடப்புக் கணக்கு. சேமிப்புக் கணக்கு என்பது உங்கள் சேமிப்பை வங்கியில் டெபாசிட் செய்து, அதற்கேற்ப வட்டியைப் பெறுவது ஆகும். அதுவே நடப்புக் கணக்கு என்பது வணிகப் பரிவர்த்தனைகளுக்காக பணத்தை டெபாசிட் செய்வது ஆகும். இது இரண்டிற்கும் இடையே உள்ள சிறந்த வேறுபாடுகளை இங்கு காண்போம்.
நடப்புக் கணக்கு (Current Account) என்றால் என்ன?
நடப்புக் கணக்கு பொதுவாக வர்த்தகர்கள், வணிகர்கள், மற்றும் தொழில்முனைவோர்கள் தங்கல் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றின் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக நடப்புக் கணக்கில் பணம் செலுத்துவதற்கு காகித காசோலைகள் (paper cheques) பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை கணக்கில் பணப் பரிவர்த்தனைகளுக்கு எல்லை கிடையாது. ஆனால், வட்டி வருவாயை வழங்காது.
சேமிப்புக் கணக்கு (Saving Account) என்றால் என்ன?
சேமிப்புக் கணக்கு என்பது பணத்தை டெபாசிட் செய்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். நீங்க சேமிக்கும் பணத்திற்கு வட்டியை பேங்க் வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், இதற்கு குறைந்தபட்ச இருப்பு குறைவு தான். இருந்தாலும், இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு, மேலும் ஓவர் டிராஃப்ட் வசதி இல்லை.
நடப்புக் கணக்குக்கும் சேமிப்புக் கணக்குக்கும் (Current Account vs Saving Account In India) உள்ள வேறுபாடுகள்:
இப்போது நீங்க நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கை பற்றி தெரிந்துக் கொண்டீர்கள். இப்போது இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
நடப்புக் கணக்கு
சேமிப்புக் கணக்கு
இவையே, current account க்கும், savings account க்கும் இருக்கும் வேறுபாடுகள். இனிமே, பேங்கில் புதுசா அக்கௌண்ட் ஓப்பன் பண்றதா இருந்தா எல்லாம் தெரிஞ்சிட்டு அப்பறம் ஓப்பன் பண்ணுங்க.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…