2022-23 நிதியாண்டுக்கானபட்ஜெட் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளில் வரி விதிப்பு மற்றும் விலக்கு அளிக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக இதுவரையில் கிரிப்டோகரன்சிகளுக்கு வரி இல்லாமல் இருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கிரிப்டோகரன்சி வரி குறித்த விவரங்கள்.
கிரிப்டோகரன்சி லீகல் இல்லையாம், ஆனால் டேக்ஸ் இருக்காம். டேக்ஸ் கட்டினால் அது லீகலாவிடுமாம். அது லீகலானாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு எந்த அமைப்பும் கிடையாது.
எந்த அமைப்பும் இல்லாததால், அதை ஒரு சொத்தாக காட்டி அடகு வைக்க முடியாது. அடகு வைக்க முடியாத காரணத்தால் அதை ஒரு சொத்தாக வங்கியில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
அதை சொத்தாக வங்கிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், கிரிப்டோகரன்சியை வருமானவரித்துறைக்கு கணக்கு காண்பிக்க வேண்டுமாம்.
இந்த சொத்தாக இல்லாத சொத்தை நஷ்டத்துக்கு விற்றாலும் 30 + 1% வரி கட்டனுமாம். இறுதியில், என்னதான் சொல்ல வராங்கனுத் தெரியவில்லை.
ஆக, கிரிப்டோகரன்சி லீகலா? இல்லீகலா? வரிக் கட்டணுமா? கட்டணுமா கட்டக்கூடாதா? இருக்கா இல்லையா?
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…