விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் Equitas Small Finance Bank வங்கியின் குறிப்பிட்ட கிளையை அணுகி தனது தொழிலை மேம்படுத்துவதற்காக ரூ.20 லட்சத்தை வணிகக் கடன் வாங்கியுள்ளார். மேலும் கிளை மேலாளர் அவரை அழைத்து, கடன் தொகையில் 10% அதாவது ரூ.2 லட்சத்தை லஞ்சமாக தருமாறு கூறியுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார். கடை உரிமையாளரின் புகாரின் பேரில் விசாகப்பட்டினம் துவாரகாநகரில் உள்ள ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் கிளை மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் மேனேஜர் கடை உரிமையாளரிடம் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடன் தொகையை வழங்குவதற்கு வசதியாக லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, லஞ்சத்தை ரூ.1.30 லட்சமாக குறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 20 லட்சம் கடன் தொகை வழங்கப்பட்டு, அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக புகார்தாரரிடம் குற்றம் சாட்டப்பட்டவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
புகார்தாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் கேட்டு வாங்கியபோது, சிபிஐ பொறி வைத்து குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்தது. விஜயநகரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தரின் தலையீடு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…