தங்கத்தின் விலை வாரம் முதல் நாளிலேயே குறைந்து காணப்படுவதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதே போல, கடந்த வாரமும் தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீக காலமாக பெரிய அளவில் தங்கத்தின் விலை ஏற்றமில்லாமல் இருந்து வருகிறது. அவ்வாறு, நேற்று மற்றும் ஏற்றம் அடைந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
செப்டம்பர் 19 ஆம் நாளான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) ரூ.8 குறைந்து ரூ.4,362 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.64 குறைந்து, ரூ.37.056-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சொக்கத் தங்கத்தின் விலை அதாவது 24 கிராட் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.5,034 ஆகவும், ஒரு சவரன் ரூ.40,272 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல், அதே விலையான ரூ.62.00 ஆக உள்ளது. அதன் படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை தற்போது ரூ.62,000 ஆகும்.
இவ்வாறு தங்கத்தின் விலை பெரிய அளவில் ஏற்றம் இல்லாமல் தொடர்ந்து சரிந்து கொண்டே வருவதால், மக்கள் தங்கம் வாங்குவதற்கான எண்ணத்தை மேலும் தூண்டியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…