ஒரு சிறிய தொகையை சேமிப்பது விரைவில் பெரிய தொகையை உருவாக்குகிறது!! என்ற வரிகளை நினைவுப்படுத்துவது போல, இந்தியாவில் உள்ள பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் தங்களது பணத்தை சேமிக்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறும் சேமிக்கும் பணம் அதிக வட்டி விகிதம் பெற்றதாகவும் மற்றும் உத்தரவாதம் மிக்கதாகவும் இருக்கும் வகையில் பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
வங்கிகளில் வழங்கப்படும் பிக்ஸடு டெப்பாசிட் சேமிப்பு திட்டங்கள் குறிப்பிட்டத் தேவையைப் பூர்த்தி செய்யும். ஆனால், வட்டி விகிதம், வரி சலுகைகள் போன்றவை தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களைப் போல் அதிகம் வழங்குவதில்லை. இதில் PPF சேமிப்பு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் எவ்வாறு சேமிப்பது பற்றி பார்ப்போம்.
பப்ளிக் ப்ரோவிடென்ட் ஃபண்ட் (Public Provident Fund)
இத்திட்டத்தின் கீழ் சேமிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம். பிபிஎஃப் (PPF) அக்கவுண்ட் என்பது 15 வருட சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் சேமிப்பதன் மூலம் 7.15 சதவீத வட்டி விகிதத்தை பெறலாம்.
மேலும், இத்திட்டத்தில் பெறும் வட்டி விகிதமானது கூட்டு வட்டிவீதத்தில் கணக்கீடு செய்யப்படும். இதன் வாயிலாக பெறும் வட்டி விகிதம் இறுதியில் நமக்கு அதிக இலாபத்தை வழங்கக் கூடியதாக இருக்கும்.
இத்திட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை முதலீடு செய்யலாம். இதில் 12 மாதத்திற்கு ரூ. 500 முதல் ரூ. 1,50,000 வரை முதலீடு செய்யலாம்.
எவ்வளவு தொகை முதலீடு செய்தால், எவ்வளவு தொகை கிடைக்கும் மற்றும் அதற்கான வட்டி விகிதத்தை கணக்கிட்டுக் கொள்ளலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…