Tue ,Oct 22, 2024

சென்செக்ஸ் 80,555.38
-595.89sensex(-0.73%)
நிஃப்டி24,583.95
-197.15sensex(-0.80%)
USD
81.57
Exclusive

STATE BANK: எஸ்பிஐ வாடிக்கையாளர்களே ஜாக்கிரதை..!

Muthu Kumar April 22, 2022 & 10:12 [IST]
STATE BANK: எஸ்பிஐ வாடிக்கையாளர்களே ஜாக்கிரதை..!Representative Image.

STATE BANK: இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் MCLR எனப்படும் கடன்களுக்கான விகிதத்தை எஸ்பிஐ உயர்த்தியுள்ளது. இதனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடன் மற்றும் புதிய கடன்களுக்கும் வட்டி விகிதம் மாறுப்படும். இதனால் ஹோம் லோன், கார் லோன் எடுத்தவர்களின் கடனுக்கானமாத தவணை (EMI) அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

MCLR வட்டி 

எஸ்பிஐ வங்கி, ஒரு மாதம் மற்றும் மூன்று மாத தவணைகளுக்கும் MCLR விகிதத்தை 6.65%ல் இருந்து 6.75 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 6 மாதங்களுக்கான MCLR விகிதம் 6.95 சதவீதத்தில் இருந்து, 7.05 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1 ஆண்டுக்கான MCLR வட்டி விகிதம் 7ல் இருந்து 7.10 சதவீதமாகவும் மற்றும் 2 வருடத்திற்கு MCLR வட்டி விகிதம் 7.20 சதவீதத்தில் இருந்து, 7.30 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் எஸ்பிஐ வங்கி 3 ஆண்டுகளுக்கான MCLR வட்டி விகிதத்தை 7.30 சதவீதத்தில் இருந்து, 7.40 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் MCLRவிகிதத்தை மாற்றி அறிவித்து இருந்தது. 0.05 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது எஸ்பிஐ வங்கியும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மாத தவணை அதிகரிப்பு..?

கார் லோன், ஹோம் லோன் போன்ற பல்வேறு வகையான லோன் எடுத்துள்ள வாடிக்கையாளர்கள் இதனால் மாத தவணை விகிதம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர். இதுக்குறித்த கூடுதல் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கி லோன் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம் அல்லது எஸ்பிஐ ஆன்லைன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் பார்க்கலாம் என எஸ்பிஐ நிற்வாகம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்