வரும் 19ம் தேதி தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. களத்தில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 11,196 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 17,922 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 28,660 பேரும் போட்டியிடுகிறார்கள்.
தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணிகளுக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையே இந்த தேர்தலில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால், தேர்தல் நடைபெறும் இடங்களில் மட்டும், வரும் 19ம் தேதி அரசு பொது விடுமுறையாக அறிவித்து தலைமை செயலர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். பிப்ரவரி 19ல் அனைத்து விதமான அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்வி நிறுவனங்கள் முற்றிலும் இயங்காது என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெறும் இடங்களில் வரும் 19ம் தேதி வங்கிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் இல்லாத மற்ற பகுதிகளில் வங்கிகள் எப்பவும் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…