கிரெடிட் கார்டு என்பது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் தங்கள் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் ஒரு எளிய பிளாஸ்டிக் அட்டை ஆகும். அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடிக்கையாளர் எந்த பொருளையும் சேவையையும் விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும்.
Credit Card நம்மிடம் பணம் இல்லாத போது நமது சிறந்த நண்பராக மாறுகிறது. ஷாப்பிங், பயணம் அல்லது அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என எதுவாக இருந்தாலும், கையில் உள்ள பணமும் வங்கியில் உள்ள பணமும் செல்லாததாகிவிட்டால், கிரெடிட் கார்டு உங்களுக்குத் துணை நிற்கும்.
இந்த கிரெடிட் கார்டுகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பயன் தரக் கூடியது. இதில் எத்தனை வகையான கிரெடிட் கார்டுகள் உள்ளன ஒவ்வொன்றும் எவ்வகையில் நமக்கு பயனளிக்கிறது என்பதை புரிந்து கொண்டாலே பல நன்மைகள் கிடைக்கும்.
கிரெடிட் கார்டின் வகைகள்:
கிரெடிட் கார்டுகள் பல்வேறு வகைகளில் இருக்கின்றன. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு நன்மை மற்றும் சலுகைகளை தருகிறது, எனவே, உங்கள் தேவைகளுக்கு தகுந்த ஒரு சிறந்த கிரெடிட் கார்டை தேர்ந்தெடுங்கள்.
ரிவார்டு கிரெடிட் கார்டுகள்
Rewards Credit Cards பொதுவாக உங்கள் செலவின் சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிகள் (Points) அல்லது பணத்தைத் திரும்பப் பெறுகின்றன. மேலும் சில மளிகை சாமான்கள், எரிவாயு மற்றும் உணவு போன்ற வகைகளில் போனஸ் புள்ளிகளை வழங்குகின்றன.
ரிவார்டு கிரெடிட் கார்டுகள் பெரும்பாலும் ஸ்டேட்மென்ட் கிரெடிட்கள், கிஃப்ட் கார்டுகள் மூலம் பாயுண்ட்களை பெற உதவுகிறது. அன்றாடச் செலவுகளுக்கு இது சிறந்த கிரெடிட் கார்டாக அமைகிறது. மளிகை சாமான்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற அடிப்படை உபகரணங்களை வாங்க ரிவார்டு கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் செலவு செய்யும் பணத்தில் கேஸ்பேக்குகள் மற்றும் பயண ரிவார்டுகளை பெறலாம்.
கேஷ்பேக் கிரெடிட் கார்டுகள்
Cash Back Credit Cards உங்கள் செலவில் கேஷ் பேக்குகளை பெறவும், ஸ்டேட்மென்ட் கிரெடிட்களை பெற உதவுகிறது, இருப்பினும் ரிவார்டுகளை எவ்வாறு செலுத்துவது என்பது கார்டுக்கு கார்டு மாறுபடுகிறது.
ட்ராவலர் கிரெடிட் கார்டுகள்
Travel credit cards பயணத்திற்கு ஏற்ற வகையில் ரிவார்டு பாயிண்ட்களை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. சில ட்ராவலர் கிரெடிட் கார்டுகள், frequent flyer program அல்லது hotel loyalty program போன்ற நிறைய ரிவார்டுகளை பெற உதவுகிறது.
எரிபொருள் கிரெடிட் கார்டுகள்
Fuel Credit Card உடன் எரிப்பொருள் கூடுதல் கட்டண தள்ளுபடிகளை பெற்று போக்குவரத்து செலவுகளை குறையுங்கள். இத்தகைய கார்டுகள் எரிபொருள் வாங்குதலில் கூடுதல் ரிவார்டு பாயிண்களை பெறுவதற்கு உதவும்.
ஷாப்பிங் கிரெடிட் கார்டுகள்
Shopping Credit Card உடன் பரிவர்த்தனைகள் மற்றும் கொள்முதல்கள் மீது தள்ளுபடிகளி பெற ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள். தள்ளுபடி வவுச்சர்கள், கேஷ்பேக்குகளை அனுபவியுங்கள்.
கிரெடிட் கார்டின் பயன்பாடு:
பணத்தைப் பெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கிரெடிட் கார்டு முறை. சுருக்கமாக சொன்னால் காகிதப் பணத்திற்கு பதிலாக வந்த பிளாஸ்டிக் பணம் தான் கிரெடிட் கார்டு. இதை பயன்படுத்தி நமக்கு வேண்டிய அனைத்து பொருட்களைவும் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த கடனை வங்கிக்குத் திருப்பிச் செல்லுத்திவிட வேண்டும். காலதாமதம் செய்தால் வட்டியும் திருப்பி செலுத்த நேரிடும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…