Wed ,Oct 30, 2024

சென்செக்ஸ் 79,993.68
-375.35sensex(-0.47%)
நிஃப்டி24,354.55
-112.30sensex(-0.46%)
USD
81.57
Exclusive

டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன? கிரிப்டோகரன்சிக்கும் சிபிடிசிக்கும் என்ன வேறுபாடு? இனிமேல் டிஜிட்டல் கரன்சி ஆதிக்கம் தான்!!

Nandhinipriya Ganeshan February 08, 2022 & 18:00 [IST]
டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன? கிரிப்டோகரன்சிக்கும் சிபிடிசிக்கும் என்ன வேறுபாடு? இனிமேல் டிஜிட்டல் கரன்சி ஆதிக்கம் தான்!!Representative Image.

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி (Central Bank Digital Currency)

நிதியமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் தனது 2022 பட்ஜெட் உரையில் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India-RBI) 2022-23 நிதியாண்டில் தனது சொந்த டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறினார். ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சி(cbdc) பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம், டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், டிஜிட்டல் ரூபாய்  என்றால் என்றால் என்ன, எப்போது வரும், கிரிப்டோகரன்சிக்கும் டிஜிட்டல் ரூபாய்க்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.

 

 

'டிஜிட்டல் கரன்சி' என்றால் என்ன?

மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (Digital Currency) என்பதன் சுருக்கம்தான் சிபிடிசி. நாம் தற்போது பயன்படுத்தி வரும் காகித ரூபாய் நோட்டுக்குப் பதிலாக வரும் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்படும் நாணயம் தான் டிஜிட்டல் கரன்சி. இது மற்ற பொருட்களுக்கு நிகராக பரிமாற்றம் செய்யக் கூடியது. இந்த கரன்சி மூலம் பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்ப முடியும்.  நாம் பயன்படுத்தும் ரூபாய் மதிப்பில் தான் இருக்கும் அதில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், டிஜிட்டல் வடிவத்தில் இருக்கும்.

 

 

சிபிடிசி கரன்சியின் பயன்பாடு

இந்த சிபிடிசி (cbdc) கரன்சியை அறிமுகப்படுத்துவதன் மூலமாக, நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளின் உற்பத்தி குறையும். இதனால், நம் நாட்டின் காகிதப் பயன்பாட்டில் பெரும் பகுதியை சேமிக்க முடியும், அச்சடிக்கும் செலவும் மிச்சமாகும். மக்கள் இந்த கரன்சியை இண்டர்நெட் இல்லாமலே பரிமாற்றம் செய்துக் கொள்ள முடியும். இதனால், பரிமாற்ற செலவு குறையும், செட்டில்மெண்ட் பற்றிய பல சிக்கல்கள் முடிவுக்கு வரும்.

அதோடு, நாட்டில் கருப்புப் பணம் உருவாக்கத்தை பெருமளவில் குறைக்க முடியும். யாரிடம் இந்தப் பணம் இருக்கிறது, எங்கெல்லாம் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதையும் கண்காணித்து கொள்ளலாம்.

 

 

கிரிப்டோகரன்சிக்கும் சிபிடிசிக்கும் என்ன வேறுபாடு?

கிரிப்டோகரன்சியும் சிபிடிசியும் டிஜிட்டல் கரன்சிகள் தான். ஆனால், ரெண்டும் வெளிபடுத்தும் நிறுவத்தின் அடிப்படையில் மாறுபட்டது. கிரிப்டோகரன்சி (Cryptocurrency) தனியாருக்கு சொந்தமானது, சிபிடிசி என்பது ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்படும் சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற டிஜிட்டல் கரன்சியாகும். இந்த டிஜிட்டல் காயின்கள், தனியார் கிரிப்டோகரன்சிகளான பிட்காயின், எதிரியத்துடன் ஒப்பிடுகையில் வேறுபட்டது.

 

 

கிரிப்டோகரன்சி டிஜிட்டல் கரன்சி

கிரிப்டோகரன்சிகளுக்கு நிலையான மதிப்பு என்று ஒன்றும் கிடையாது. அதை யாரும் கட்டுப்படுத்துவதும் இல்லை. ஆனால், இந்தியாவில் வெளியிடப்படவிருக்கும் டிஜிட்டல் கரன்சிகளுக்கு ஒரு நிலையான மதிப்பு வழங்கப்படும், அரசால் கட்டுப்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல், திறன்மிக்கது, நம்பிக்கையானது என்பதால் மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே..... கிரிப்டோகரன்சி என்பது இவ்வளவு தானா? அதை இப்படி தான் யூஸ் பண்ணனுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்