NFT இந்த வார்த்தை தான் இப்பொழுது அனைத்து தமிழ் படைப்பாளிகளின் மனதில் உள்ளது. எப்படியாவது Cryptocurrency யில் NFT மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும். தன்னை அவமானபடுத்தியவர்கள் முன் கெத்தாக வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளது என்பது கண்கூட காண முடிகிறது.
ஆனால் ,எப்படி NFT யில் சம்பாதிப்பது என்பதை பற்றிய வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
NFT என்றால் என்ன? அது ஒரு Non-Fungible Token. இது அனைவருக்கும் தெரியும். இந்த NFT இந்தியாவில் சட்டபூர்வமாக்கப்பட்டதா என்றால் இல்லை எனக் கூறுவார்கள்.பெரிய நடிகர்களில் இருந்து, ரசிகர் பட்டாளம் உள்ள அனைவரும் இந்த NFT ல் கலக்கி வருகிரார்கள்.
அமேசான் , ஃப்ளிப்கார்ட் போன்று NFT க்கு என்றே தனி Marketplaces உலகம் முழுவதும் தினந்தோறும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். முதலீட்டாளர்களும் அதிக அளவு விருப்பம் செலுத்துவதால், NFTன் படையெடுப்பு 2022 லிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் Rarible, OpenSea போன்ற NFT Marketplaces பெரும் அளவில் கவனத்தை ஈர்க்கின்றனர். இந்தியாவிலும் Wazrix தனது NFT சேவையை சென்ற வருடம் தொடங்கியது.
இந்த NFT யில் பணம் பெற cryptocurrency ஐ ஒழுங்குபடுத்த இந்திய அரசு இதுவரை எந்த சட்டமும் இயற்றவில்லை.
மேலும், NFTயில் Cryptocurrency ஈடுபாடு பெருமளவில் உள்ளதால் இந்தியாவில் NFT கதை மதில் மேல் உள்ள பூனை போல் உள்ளது.
ஒரு சில இந்தியர்கள் Airtm போன்ற Money Exchangers மூலமாக Cryptocurrency ஐ இந்தியன் ரூபாயாக பெறுகின்றனர் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…