Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...! குஷியில் மாணவர்கள்...!

Nandhinipriya Ganeshan April 17, 2022 & 10:50 [IST]
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...! குஷியில் மாணவர்கள்...!Representative Image.

Kaliyuga Varatharaja Perumal Temple Festival: அரியலூர் அருகே கல்லக்குறிச்சி  கலியுகவரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  திருவிழாவை முன்னிட்டு கலியுக வரதராஜ பெருமாள் சுவாமி சூரிய வாகனம், வெள்ளி சிம்ம வாகனம், புன்னைமர வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி கருட வாகனம் ஆகியவற்றில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் வருகிற 18-ஆம் தேதி முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் ராமதாஸ் படையாட்சி, வெங்கடாஜலபதி படையாட்சி ஆகியோர் செய்து வருகின்றனர். 

இதையொட்டி அன்று காலை 5 மணி அளவில் பெருமாள், ஸ்ரீதேவி ,பூதேவியுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வலம் வருவார். இதன் காரணமாக நாளை அதாவது 18 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மற்றும் அனைத்து அரசு அலுவலங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,  கடலூர் ,மயிலாடுதுறை, திருச்சி,பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் இருந்து அரசு போக்குவரத்து பேருந்துகல் 24 மணி நேரமும் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தை அடுத்து ஆஞ்சநேயர் சிறிய தேரில் வீதியுலா வருவார்.  இதை பக்தர்கள் வடம் பிடித்து நான்கு வீதி வழியாக இழுத்துச் செல்வர். இதை தொடர்ந்து நாளை மறுநாள் 19ஆம் தேதி ஏகாந்த சேவை நடைபெறும். 

மேலும் படிக்க: தமிழகத்தின் 3வது பெரிய தேர் ஈரோட்டில் உள்ளதா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூ க வலை  த்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்