Sat ,Oct 19, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Bharathidasan University Exam Fees: இந்த தேர்வுக்கான கட்டணமும் உயர்வா? பாமர மாணவர்களின் நிலை!

Gowthami Subramani April 10, 2022 & 14:38 [IST]
Bharathidasan University Exam Fees: இந்த தேர்வுக்கான கட்டணமும் உயர்வா? பாமர மாணவர்களின் நிலை!Representative Image.

Bharathidasan University Exam Fees: தமிழகத்தில் கடந்த சில நாள்களாக, எல்லா இடத்திலும் நாம் கேள்விப்படுவது விலை உயர்வு என்ற ஒன்றைத் தான். அந்த அளவிற்கு அத்தியாவசிய பொருள்களின் விலை முதல் மாணவர்கள் எழுதும் தேர்வுக்கான கட்டணம் வரை அனைத்தும் உயர்ந்து கொண்டு தான் போகிறது.

பெட்ரோல், டீசல் எனத் தொடர்ந்து, நூல் விலை, பஞ்சு விலை என அனைத்தும் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால், பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன. ஒவ்வொரு இடத்திலும், இதற்கான போராட்டத்தை முன் எடுத்துக் கொண்டு செல்லும் வகையில், அதற்கான பலன் இன்னும் கிடைக்கப்பெறாமல் தான் போகிறது.

இவ்வாறு தமிழகத்தில் மேலும் மேலும் எதாவதொன்றில் பொருளாதார நிதி உயர்ந்து வருவதால் மக்கள் மிகுந்த பாதிப்படைகின்றனர். இதில், தமிழகத்தில் மாணவர்கள் பயிலும் கல்லூரிகளிலும் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியதால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இதன் படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி, நீட் கட்டணத்திற்கான தேர்வு தலா ரூ. 100 உயர்ந்து காணப்படுகிறது. மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக எதிர்கட்சி தலைவர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று நோயால், தற்போது பெரும்பாலானோர் பொருளாதாரத்தினை இழந்து காணப்படுகின்றனர். மாணவர்களின் தாழ்மையான நிலையையும் கருத்தில் கொண்டு கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படுகிறது. இது போல பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கான கட்டண உயர்வால், மற்ற பல்கலைக்கழகங்களில் கட்டணம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால், அரசு இதற்கு ஒரு நல்ல முடிவாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப பக்கத்தில் இணைந்திடுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்