Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,329.19
322.58sensex(0.40%)
நிஃப்டி24,870.15
120.30sensex(0.49%)
USD
81.57
Exclusive

Easy Tricks For Doing Maths: எக்ஸாம்ல சீக்கிரமா மேக்ஸ் போட முடிலயா…! இந்த ட்ரிக்-அ ஃபாலோப் பண்ணுங்க…..

Gowthami Subramani April 22, 2022 & 14:15 [IST]
Easy Tricks For Doing Maths: எக்ஸாம்ல சீக்கிரமா மேக்ஸ் போட முடிலயா…! இந்த ட்ரிக்-அ ஃபாலோப் பண்ணுங்க…..Representative Image.

Easy Tricks For Doing Maths: கணிதம் போடும் நேரத்தில் நாம் கால்குலேட்டராக மாறுவது ஒரு சில சமயத்தில் வழக்கமான ஒன்று. அவற்றுள், கணிதத் தேர்வை எழுதும் போது மிக அதிகமான நேரத்தை உபயோகித்துக் கொள்வதால், மற்றவற்றைச் செய்வதற்கு நேரம் பத்தாமல் போகிறது. இதனைக் குறைக்கும் விதமாக, நாம் கணிதம் போடும் போது மிக வேகமாகப் போடுவதைக் கற்றுக் கொள்ள வேண்டும். கணிதத்தில் சில ட்ரிக்குகள் உள்ளன.

போட்டித்தேர்வுகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கேட்ட கேள்விகளுக்கு விடையளிப்பது என்பது சாதாரணச் செயல் அல்ல. அதிலும், கணிதம் என்ற பகுதி வந்து விட்டால், அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டும். சிறிய எண்களின் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவற்றை சுலபமாகச் செய்திடலாம். ஆனால், பெரிய எண்களுக்குச் சில ட்ரிக்குகளை உபயோகித்தால் மட்டுமே சுலபமாகப் போட முடியும். நிறைய ட்ரிக்குகள் உள்ளன. அவற்றில் 5 வகையான ட்ரிக்குகளைப் பற்றி இங்குக் காணப்போகிறோம்.

ட்ரிக்குகள்

பெரிய எண்களைக் கூட்டுதல்

226 + 646

இந்த எண்களைக் கூட்டுவதற்குக் கடினமாக இருப்பின், கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்கைப் பயன்படுத்தி உபயோகிக்கவும்.

மேலே கொடுக்கப்பட்ட எண்களை round எண்களாக எடுக்க வேண்டும்.

இதில், 226 ஐ 230 ஆகவும், 646 ஐ 650 ஆகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Round செய்த எண்களைக் கூட்ட வேண்டும். 230 + 650 = 880

230-226 = 4

650-646 = 4

இந்த இரண்டு எண்களையும் கூட்ட வேண்டும்.

4 + 4 = 8

உண்மையான கூடுதலைக் கண்டுபிடிக்க, Round செய்த எண்களின் கூடுதலிலிருந்து மேலே வந்த கூடுதலைக் கழிக்க வேண்டும். 880 – 8 = 872

விடை: 226 + 646 = 872

பெரிய எண்களைக் கழித்தல்

எந்தவொரு எண்ணையும் 1000 ஆல் கழிப்பதற்கு எளிதான ட்ரிக்குகள் உள்ளன. உதாரணமாக, 448 ஐ 1000 ஆல் கழிக்க வேண்டும்.

இதில் கடைசியாக குறிப்பிட்ட எண்ணை மட்டும் 10 ஆல் கழிக்க வேண்டும். மீதமுள்ள எண்களை 9 ஆல் கழிக்க வேண்டும்.

இதற்கு குறிப்பிட்ட ஒவ்வொரு எண்ணையும் தனித்தனியாக

முதல் படி: 4 – 9 = 5

இரண்டாம் படி: 4 – 9 = 5

மூன்றாம் படி: 8 – 10 = 2

விடை: 552

பெரிய எண்களைப் பெருக்குதல்

எந்தவொரு எண்ணையும் 5 ஆல் பெருக்கி வரும் ட்ரிக்கைக் காண்போம்.

இரட்டைப்படை எண்ணை 5 ஆல் பெருக்குவதற்கான ட்ரிக்ஸ்

முதல் படி: ஐந்தால் பெருக்கக்கூடிய எண்ணின் பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் படி: அந்த எண்ணின் கடைசியில் ஒரு ஜீரோவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, 5 * 20

இதில் 20-ல் பாதி 10.

10- உடன் ஒரு பூஜ்ஜியத்தைச் சேர்த்தால் 100.

விடை: 5 * 20 = 100

ஒற்றைப்படை எண்ணாக இருந்தால், இதில் கொஞ்சம் வேறுபடும்.

முதல் படி: ஐந்தால் பெருக்கக்கூடிய ஒற்றைப்படை எண்ணை எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த எண்ணை முதலில் ஒன்றால் கழிக்க வேண்டும்.

இரண்டாம் படி: கழித்து வந்த விடையின் பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். ஐந்தை கடைசி எண்ணாக எடுத்துக் கொள்ளவும்.

உதாரணமாக, 5 * 17

இதில், 17-1 = 16

16-ல் பாதி 8

ஐந்தை கடைசியாகவும், மேலே உள்ள விடையை முதலிலும் வைத்தால், 85.

விடை: 85

9 ஆல் பெருக்குதல்

எந்தவொரு எண்ணையும் ஒன்பதால் பெருக்கும் போது கீழே கொடுக்கப்பட்ட படிகளைப் ஃபாலோப் பண்ணவும்.

9-ஐ 3 ஆல் வகுக்க.

படி 1: முதலில், 9 ஆல் வகுக்கக்கூடிய  எண்ணை ஒன்றால் கழிக்க வேண்டும்.

3 – 1 = 2

படி 2: அதன் பின், மேலே கிடைக்கப்பட்ட விடையை 9 ஆல் கழிக்க வேண்டும்.

9 – 2 = 7

இந்த இரு எண்களையும் தொடர்ச்சியாக எழுதினால் கிடைப்பது தான் விடை.

அதாவது, 9 * 3 =27

விடை: 27

சதவீதங்களைக் கண்டறிதல்

ஒரு எண்ணின் சதவீதங்களைக் கண்டறிய கீழ்க்காணும் படிகளைப் பயன்படுத்தவும்.

250 ல் 5% என்ன?

முதல் படி: முதலில் 250-ல் தசம எண்ணாக மாற்ற ஒரு புள்ள இடது பக்கமாக வைக்க வேண்டும்.

25.0 = 25

இரண்டாம் படி: இதில், கிடைத்த விடையை 2 ஆல் வகுக்க வேண்டும். 12.5.

விடை: 12.5

இது போன்ற இன்னும் சில ட்ரிக்குகளைக் காண எங்கள் Search Around Web பக்கத்தில் இணைந்திடுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்