How to Apply For TN Pharmacist Recruitment 2022: தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (Medical Services Recruitment Board - MRB) தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 889 மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் (ஆகஸ்ட் 10, 2022) தொடங்குகிறது. எனவே, தமிழ்நாடு அரசு வேலைகளை தேடும் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு முன்பாக TN MRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான mrb.tn.gov.in -க்கு சென்று உங்கள் விண்ணப்பத்தை விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
MRB Pharmacist Recruitment 2022 பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர் - மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB), தமிழ்நாடு
பணியின் பெயர் - மருந்தாளர்
வகை - தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடங்கள் - 889
சம்பளம் - ரூ.35400 - 112400/-
வேலை இடம் - தமிழ்நாடு
தகுதி - இந்திய குடிமக்கள்
அறிவிப்பு எண் - 10/MRB/2022
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
விண்ணப்பிக்க தொடக்க தேதி - 10.08.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.08.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் - www.mrb.tn.gov.in
கல்வித் தகுதி:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள், டிப்ளமோ இன் பார்மசி (B.Pharm, M.Pharm) படித்திருக்க வேண்டும். இதற்கான விரிவான தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு:
SC, SC(A)s, STs, MBC&DCs, BCs, BCMs (இந்த சமூகங்களைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் உட்பட) - வயது வரம்பு இல்லை
மற்றவர்கள் - 32 - 50 வயது
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் முறையில் மட்டுமே வசூலிக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணத்தை இணைய வங்கி அல்லது பாரத் யுபிஐ முறையில் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/எஸ்சிஏ/டிஏபி (பிஎச்) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300 மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும், அறிவிப்பு எண். 13 MRB 2019, தேதி: 01.03.2019 இன் படி ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் இந்த புதிய அறிவிப்பின்படி மீண்டும் ஒருமுறை விண்ணப்பிக்க வேண்டும் ஆனால் மீண்டும் அவர்கள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் தேர்வு/ நேர்முகத்தேர்வு/ தகுதிப் பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் நியமிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
எனவே, விண்ணப்பதாரர்கள் MRB இணையதளமான www.mrbonline.in க்குச் செல்லவும்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டந்து, எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
பின்னர், தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
அதன்பின் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.
உங்கள் விண்ணப்பத்தை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.
www.mrb.tn.gov.in ஆட்சேர்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
Tags:
Tamilnadu medical services recruitment, www.mrb.tn.gov.in 2022 notification for pharmacist, MRB pharmacist recruitment 2022, www.mrb.tn.gov.in notification, TN MRB pharamacist recuirtment 2022, TN Pharmacist recruitment 2022, How to Apply For TN Pharmacist Recruitment 2022, Medical Services Recruitment Board Recruitment 2022, www.mrb.tn.gov.in pharmacist 2022, Anything latest updates for tn mrb pharmacist recruitment 2022, www.mrb.tn.gov.in 2022 notification for pharmacist, TN MRB Recruitment 2022, TN govt jobs 2022 notification
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…