Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 80,438.40
-568.21sensex(-0.70%)
நிஃப்டி24,586.25
-163.60sensex(-0.66%)
USD
81.57
Exclusive

Infosys Recruitment 2022 Apply Online: Infosys நிறுவனத்தின் சூப்பரான வேலைவாய்ப்பு…! ஸ்டார்டிங் சம்பளமே எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani May 13, 2022 & 15:40 [IST]
Infosys Recruitment 2022 Apply Online: Infosys நிறுவனத்தின் சூப்பரான வேலைவாய்ப்பு…! ஸ்டார்டிங் சம்பளமே எவ்வளவு தெரியுமா..?Representative Image.

Infosys Recruitment 2022 Apply Online: 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை Infosys நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இன்னும் பிற முக்கிய விவரங்கள் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Infosys

பணியின் பெயர்

.Net Developer

காலிப்பணியிடங்கள்

அறிவிப்பைப் பொறுத்து

பணியிடம்

பெங்களூர்

பதவி குறித்த நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Infosys Recruitment 2022 Apply Online).

துறை

காலிப்பணியிடங்கள்

Dot Net Developer

அறிவிப்பைப் பொறுத்து

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில், MSc, MCA, BCA, Bachelor of Science (Engg), Bachelor of Technology, Bachelor of Engineering போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

பணி பொறுப்புகள்

  • Infosys டெலிவரி குழுவின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுடன் இணைந்திருப்பதை முக்கிய பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், வாடிக்கையாளர்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களின் திருப்தியை உறுதி செய்ய வேண்டும்.
  • தொழில்நுட்பக் களத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவிலான சேவைகள் வழங்குவதை உறுதி செய்து, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும் (Infosys Freshers Recruitment 2022).
  • மேம்படுத்தப்பட்ட உயர்தர குறியீடு வழங்குதல், தொடர்ச்சியான அறிவு மேலாண்மை, மற்றும் நிறுவன வழிகாட்டுதல்கள், செயல்முறைகளைப் பின்பற்றுதல் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு Team-ஐ வழிநடத்த வேண்டும்.
  • Development & Maintenance Projects-ல் இருக்கும் Project Life Cycle நடவடிக்கைகளைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • மேலும், பகுப்பாய்வு திறன்கள் (Analytical Abilities), (தொழில்நுட்ப திறன்கள்) Strong Technical Skills, Good Communication Skills கொண்டிருக்க வேண்டும்.

வேலை திறன்கள் (Infosys Job Skills)

விண்ணப்பதாரர்கள், மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்கக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

  • .Net->ASP.Net
  • .Net
  • .Net->ADO.Net

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Infosys Recruitment 2022 for Freshers).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் Infosys நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில், Careers என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • அதில் Experienced Professional என்பதைக் க்ளிக் செய்து இருப்பிடத்தை இந்தியா எனத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பின், அந்தப் பக்கத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பைத் தேடவும்.
  • பின்னர், விண்ணப்பப்படிவத்தில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இந்த விண்ணப்பப்படிவத்தினை எதிர்காலத் தேவைக்காக பிரிண்ட் அவுட் செய்து கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்