Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Neet Exam Latest Update: நீட் தேர்வு விலக்கிற்கு ஆளுநர் ஒப்புதல்? இந்த காரணத்தினால் தானா…!

Gowthami Subramani April 18, 2022 & 11:45 [IST]
Neet Exam Latest Update: நீட் தேர்வு விலக்கிற்கு ஆளுநர் ஒப்புதல்? இந்த காரணத்தினால் தானா…!Representative Image.

Neet Exam Latest Update: தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு குறித்து அனுப்பப்பட்ட மசோதா தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார் என்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

நீட் தேர்வு என்ட்ரி

தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று புதிதாக சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதில், நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் சில பேர் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டனர் என்ற தகவல்கள் வெளிவந்தன. இந்த நீட் தேர்வு சட்டம் அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது நிறைவேற்றப்பட்டது.

திமுக போராட்டம்

அதன் பின், நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதாவை ஒழிப்பதற்காக தி.மு.க கட்சியினர் போராடினர். இதனால், மாணவர்களின் கனவு தூள் தூளாகி விடும். இந்த நீட் தேர்வு அமலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், நாள்கள் ஓடிக் கொண்டிருந்தது.

ஆட்சிக்கு வந்த உடன்

பின்னர், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என மக்கள் நம்பினர். அதன் படியே, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நீட் விலக்கு மசோதாவை கையில் எடுத்தார். ஆட்சிக்கு வந்த உடன் நீட் விலக்கு மசோதாவைக் கட்டாயம் நிறைவேற்றுவேன் என்ற எண்ணத்தில் செயல்பட்டார். அதன் படியே முதலில் ஆளுநருக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பி வைத்தார். ஆனால், நீட் விலக்கு மசோதா விண்ணப்பம் கிடைத்தும் ஆளுநர் எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும், இதற்காக எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் ஆளுநர் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. முதல் முறையாக இரு முறை மசோதாவைத் தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசாகும். நீட் விலக்கு மசோதாவிற்காக இரு முறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொதித்தெழுந்த அரசு

ஆளுநர் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், தமிழக அரசு ஆளுநருக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. இதனையடுத்து, தமிழக சட்டசபையை மறுபடியும் கூட்டி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைருக்கு அனுப்பும் படி ஆணையிட்டது. மேலும், இதில் காலம் தாழ்த்தக் கூடாது எனவும் தெரிவித்தது. இவ்வாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு விலக்கிற்கு எந்த முடிவும் சரியாக எடுக்கப்படாத நிலையில், திமுக அரசு ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது.

ஆளுநர் ஒப்புதல்

இந்த சூழ்நிலையில், கடந்த வியாழக் கிழமை அன்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இருமுறை மசோதாவை அளித்தும் நீட் தேர்வு விலக்கில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமலும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலும் இருப்பது மிகுந்த வேதனை தருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு இருக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவை மாண்பினையும், மக்களின் ஒட்டு மொத்த உணர்வினையும் கருத்தில் கொண்டு தேநீர் விருந்தில் கலந்து கொள்வது முறையாக இருக்காது என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அனைத்து சட்டமன்றக் கூட்டத்திற்கு நடுவே ஒப்புதல் அளிக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு நல்ல தீர்வு கிடைக்கப்பெறும் என தமிழக அரசு கூறியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ி செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்