Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

School News Today: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! இன்றே தொடங்கியது விண்ணப்பம்!

Gowthami Subramani April 20, 2022 & 11:42 [IST]
School News Today: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! இன்றே தொடங்கியது விண்ணப்பம்!Representative Image.

School News Today: பள்ளிக்குழந்தைகளுக்கான ஓர் ஸ்வீட் ஆன செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, 25 சதவீத இட ஒதுக்கீடு தனியார் பள்ளிகளில் அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, மாணவ, மாணவியர்கள் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கான அனைத்து வித அறிவிப்புகளும் வெளியாகின. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் இந்த அரிய வாய்ப்பினைப் பெறலாம்.

இதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் 2009 ஆம் ஆண்டு இலவச மற்றும் கல்வி உரிமைச் சட்டம் கட்டாய கல்விச் சட்டத்தின் படி 6 முதல் 14 வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் படி, அனைத்துத் தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடங்களை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற திட்டம் வெளிவந்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குழந்தைகளின் பெற்றோர்கள் இன்று முதல் தொடங்கி மே மாதம் 18 ஆம் நாள் வரை இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். குழந்தைகளுக்கான இந்த இலவச கல்வி திட்டத்தை WWW.rte.tnschools.gov.in என்ற  இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதன் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான திட்டங்கள் இன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சேலம் மாவட்டத்தில் 355 பள்ளிகள் உள்ளது. இதில், மெட்ரிக், நர்சரி, பிரைமரி போன்ற பள்ளிகள் அனைத்தும் அடங்கும். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி குழந்தைகளுக்கான சேர்க்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேற்கூறிய குறிப்பிடப்பட்ட தேதிக்குள், குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்