Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 80,827.08
-179.53sensex(-0.22%)
நிஃப்டி24,717.50
-32.35sensex(-0.13%)
USD
81.57
Exclusive

SSC Recruitment 2022: நீண்ட நாள் காத்திருப்பு…. SSC தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு…! அதுவும் இவ்வளவு சம்பளத்தில்

Gowthami Subramani May 12, 2022 & 21:45 [IST]
SSC Recruitment 2022: நீண்ட நாள் காத்திருப்பு…. SSC தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு…! அதுவும் இவ்வளவு சம்பளத்தில்Representative Image.

SSC Recruitment 2022: 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை, பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன் கல்வித்தகுதி, ஊதியத் தொகை போன்ற முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Staff Selection Commission (SSC)

ஆட்சேர்ப்பின் பெயர்

Phase 10 Selection Post

காலிப்பணியிடங்கள்

2065

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

12-05-2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

13-06-2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆட்சேர்ப்பு

காலிப்பணியிடங்கள்

Phase 10 Selection Post

2065

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்களுக்கு, அந்தந்த பதவிக்கு ஏற்றவாறு கல்வித்தகுதி மாறுபடும். இந்த பதவிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 12 ஆம் வகுப்பு / பணிக்குத் தொடர்புடைய பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 18 வயதையும், அதிகபட்ச கல்வித்தகுதியாக 30 வயதைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், அரசு விதிகளின் படி ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இதில் கலந்து கொள்ள நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் செயல்முறைகளின் படி தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

  • SSC தேர்வு பதவிக்கான ஆட்சேர்ப்புக்கு செயல்முறை எழுத்துத் தேர்வு (அனைவருக்கும்) நடைபெறும்.
  • அதனைத் தொடர்ந்து திறன் தேர்வு, PET, PST (இது தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியைப் பொறுத்து) போன்ற தேர்வுகள் நடத்தப்படும்.
  • இறுதியில், ஆவண சரிபார்ப்பு நடைபெறும்.
  • இந்தப் பதவிக்குக் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு ஒன்பது பிராந்திய அலுவலகங்கள் மூலம் நடைபெறும். இதற்கான தேர்வு வரும் 2022 ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தற்கால அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

SSC பதவிக்கான தேர்வு முறை

பகுதி

பாடம்

கேள்விகள் எண்ணிக்கை

அதிகபட்ச மதிப்பெண்கள்

காலம்

A

General Intelligence

25

50

60 நிமிடங்கள் (எழுத்தாளர் தகுதியானவர்களுக்கு 80 நிமிடங்கள்)

B

General Awareness

25

50

C

Quantitative Aptitude (Basic Arithmetic Skill)

25

50

D

English Language (Basic Knowledge)

25

50

 

விண்ணப்பக்கட்டணம்

SSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 100-ஐ விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC, ST, PWD, ESM, மற்றும் பெண்கள் போன்றோர்க்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் பின், அதில் பதிவு செயல்முறையைச் செய்ய வேண்டும்.
  • பதிவு செய்த பின், உங்கள் Account-ஐ Login செய்ய வேண்டும்.
  • அதன் பின், Apply என்பதைக் க்ளிக் செய்து பதவியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பின், அதற்கான பதிவு செயல்முறையை முடித்த பின் விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • மேலும், அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்க வேண்டும்.
  • கடைசியாக விண்ணப்பக்கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்