Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Summer Holidays 2022: கோடை கால விடுமுறை! அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அறிவிப்பு….!

Gowthami Subramani April 18, 2022 & 13:30 [IST]
Summer Holidays 2022: கோடை கால விடுமுறை! அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அறிவிப்பு….!Representative Image.

Summer Holidays 2022: கொரோனா காலத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக, பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால், மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது. மேலும், நடைபெற இருந்த தேர்வுகளும் அந்த சமயங்களில் தடை செய்யப்பட்டு ஊரடங்கிற்கு முன்னரே மாணவர்கள் எழுதிய தேர்வு மதிப்பெண்களைப் பொறுத்து பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.

இரண்டு வருடங்களாக

அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 2022 ஆம் மாதம் கொரோனா ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளில் பயில்கின்றனர். இந்த சூழ்நிலையில், தற்போது மே மாதம் வந்துள்ளதால் மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இது குறித்து முன்னரே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியுள்ளார்.

புதிய அறிவிப்பு

மேலும், சென்னையில் நடைபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், கோடை விடுமுறை பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி, தொடர்ந்து நிறைய நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாள்களைக் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வழக்கமாக, ஏப்ரல் மாதத்தில் மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் பின், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்கப்படும். அதன் பின், ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளி மீண்டும் திறக்கப்படும்.

கோடை விடுமுறை காலம்

ஆனால், இந்த முறை கோடைகால விடுமுறையைக் குறைப்பதாகத் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு முழுமையாக பாடம் நடத்த முடியாமல் போனது. இதனால், குறைக்கப்பட்ட பாடங்களைத் தவிர மீதி உள்ள பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயமாக உள்ளது.

இதன் காரணமாக, பள்ளி மாணவர்களுக்கு இந்த முறை மே மாதத்தில் 13 அல்லது 13 நாள்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப் போவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முறை பாடங்களை முழுமையாகக் கற்றுத் தரும் நோக்கத்தில் குறைவான விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த ஆண்டில் வழக்கம் போல ஒன்றரை மாதம் விடுமுறை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் பாடங்களை கற்றுக் கொள்ளுமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ி செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்