Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 80,827.08
-179.53sensex(-0.22%)
நிஃப்டி24,717.50
-32.35sensex(-0.13%)
USD
81.57
Exclusive

TANCET Exam Result 2022: வெளியானது டான்செட் தேர்வு முடிவு….! எப்படி செக் செய்வது..?

Gowthami Subramani June 09, 2022 & 11:55 [IST]
TANCET Exam Result 2022: வெளியானது டான்செட் தேர்வு முடிவு….! எப்படி செக் செய்வது..?Representative Image.

TANCET Exam Result 2022: TANCET தேர்விற்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியானததைத் தொடர்ந்து, அதன் மதிப்பெண் சான்றிதழ்களை ஜூன் 10 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டான்செட் தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வை ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது (TANCET Exam Recent Update).

இதன் படி, இந்த 2022 ஆம் ஆண்டிற்கான டான்செட் தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 30 ஆம் நாள் தொடங்கி, ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும், அதனைத் தொடர்ந்து மே 14 மற்றும் மே 15 ஆகிய இரு நாள்கள் டான்செட் தேர்வு நடைபெற்றது (TANCET 2022 Exam Date for MCA).

2022 ஆம் ஆண்டிற்கான டான்செட் நுழைவுத் தேர்வில் 36,710 பேர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே, தமிழ்நாட்டிலுள்ள இந்தக் கல்விகளுக்கான படிப்புகளை வேறு எந்த மாநிலங்களிலும் சேர்ந்து படிக்க முடியும் (TANCET Exam Results).

டான்செட் தேர்வு முடிவு

இந்தத் தேர்வுக்கான முடிவு இன்று அதாவது ஜூன் 9 ஆம் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளைக் கீழ்க்கண்ட இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் (How to Get TANCET Exam Results).

தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய இணையதள முகவரி

https://tancet.annauniv.edu/tancet

மேலும், மாணவர்கள் இதற்கான மதிப்பெண் சான்றிதழ்களை ஜூன் 10 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை குறிப்பிடப்பட்ட இணையதளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்