Wed ,Oct 30, 2024

சென்செக்ஸ் 79,942.18
-426.85sensex(-0.53%)
நிஃப்டி24,340.85
-126.00sensex(-0.51%)
USD
81.57
Exclusive

கிரிப்டோகரன்சி என்பது இவ்வளவு தானா? அதை இப்படி தான் யூஸ் பண்ணனுமா?

Nandhinipriya Ganeshan January 21, 2022 & 00:00 [IST]
கிரிப்டோகரன்சி என்பது இவ்வளவு தானா? அதை இப்படி தான் யூஸ் பண்ணனுமா?Representative Image.

இன்றைய தேதிக்கு எங்கு பார்த்தாலும் "கிரிப்டோகரன்சி கிரிப்டோகரன்சி" என்று சொல்கிறார்கள். அதில் தான் உலக அளவில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அதிகம் குவித்து வருகிறார்கள். ஆனால், உண்மையில் இன்று பல பேருக்கு கிரிப்டோகரன்சி என்றால் என்ன என்பதே தெரியாது. 

'கிரிப்டோகரன்சி' (Cryptocurrency) என்பது ஒரு டிஜிட்டல் மயமான ஒரு பணத்தின் மதிப்பு, அதாவது டிஜிட்டல் நாணயம். அமெரிக்காவின் டாலர், இந்தியாவின் ரூபாயை போல இதற்கும் மதிப்புள்ளது.  சுருக்கமாக, கரன்சியில் சில்லறைகள் (coins), பண நோட்டு (Currencies), டாலர்கள் (dollars), மற்றும் யூரோக்கள் (Euro) என பல வகை உண்டு. இவற்றை எல்லாம் நாம் கண்களால் பார்க்கவும், கைகளால் தொடவும் முடியும். ஆனால், கிரிப்டோகரன்சி என்பது முற்றிலும் டிஜிட்டல் மயமானது. இதை கண்களால் பார்க்கவோ, தொடவோ முடியாது. 

அவை அனைத்தும் இணையத்தில் உள்ள வாலட்களில் எண் வடிவத்தில் இருக்கும். இன்றைய நிலையில் கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் வைத்துள்ளார்கள். கடந்த 2009 ஆண்டு தான் உலகின் முதல் பிட்காயின் உருவாக்கப்பட்டது. அதனை ‘சடோஷி நகமோடோ’ என்ற புனை பெயரில் ஒருவர் உருவாக்கி இருந்தார். 

அதை எப்படி வாங்குவது?

உதாரணமாக, ஒரு கடையில் நீங்கள் ஏதோவொரு பொருள் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். மீதிப் பணத்திற்கு சில்லறை இல்லை என்று அந்த கடைக்காரர் ஒரு டோக்கனை கொடுக்கிறார். பொருள் வாங்கும் போது அந்த டோக்கனை மீண்டும் பயன்படுத்தி அந்த தொகைக்கான பொருளை வாங்கிக்கொள்ளலாம் இல்லையெனில் பணமாகவும் வாங்கிக் கொள்ளலாம். 

இதே டோக்கனை டிஜிட்டல் வடிவில் குடுத்தால் அது தான் கிரிப்டோகரன்சி. ஒவ்வொரு நாட்டின் கரன்சிகளையும் அந்த நாட்டில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், கிரிப்டோகரன்சியை உலகின் அனைத்து இடங்களிலும் செல்லும் தன்மைக் கொண்டவை. ஆனால், இதை இணையத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். 

கிரிப்டோகரன்சிகள்:

  • ட்ரான்,
  • டோஜ்,
  • பிட்காயின்,
  • எத்திரியம், 
  • ஷிபா மற்றும் பல.

இது மிகவும் பாதுகாப்பான நாணயம் தான். பிளாக் செயின் சிஸ்டம் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இவை உருவாக்கப்பட்டவை. இது முழுமையாக என்கிரிப்ட்டு செய்யப்பட்ட நாணயம் என்பதனால் இதை பெறுபவர் மற்றும் அனுப்புபவர் மட்டுமே அணுக முடியும். எனவே, பாதுகாப்பைப் பற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை. 

இதையும் படிக்கலாமே.... டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன? கிரிப்டோகரன்சிக்கும் சிபிடிசிக்கும் என்ன வேறுபாடு? இனிமேல் டிஜிட்டல் கரன்சி ஆதிக்கம் தான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்