Sat ,Oct 19, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Erode News Tamil: தமிழகத்தின் 3வது பெரிய தேர் ஈரோட்டில் உள்ளதா!

Manoj Krishnamoorthi April 17, 2022 & 14:00 [IST]
Erode News Tamil: தமிழகத்தின் 3வது பெரிய தேர் ஈரோட்டில் உள்ளதா! Representative Image.

மனிதன் குடி அமைத்து கிராமங்களாக மாறி தனக்கென ஒரு குலம் கோத்திரம் எனக் கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வந்தான்,  தான் தனித்தனி குடியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்த மனிதன் தன்னை நல்வழிப்படுத்த இறை வழிபாடு செய்தான். தன் சந்தோஷத்தை உற்றார் உறவினர் உடன் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடக் கோவில் திருவிழா வழி செய்கிறது.

இவ்வாறு தன் வாழ்க்கையில் தன் சுகத்துக்கத்தை இறைவனிடம் மன்றாடுவது மனிதனின் இயல்பு, தன் தேவைகளைப் பூர்த்தி செய்து தனக்கு நல்வாழ்வு அளிக்கும் தெய்வத்துக்கு நன்றிக்கடனாக ஒற்றுமையாக விழா எடுப்பது வழக்கமாகும்.

சிவகிரி வேலாயுத சுவாமி திருவிழா (Erode News Tamil)

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுக்கவை சேர்ந்த சிவகிரி என்னும் ஊரில் குடி கொண்டு இருக்கும் வேலாயுத சுவாமி கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் மிகவும் விமர்சையாக நடைபெறும். ஈரோடு மாவட்டத்தில் 25 km தள்ளி தெற்கு திசையில் அமைந்துள்ள சிவகரி என்னும் ஊர் கனககிரி என்றும் அழைபட்டது. 

அதுமட்டுமின்றி இந்த ஊரில் இருக்கும் வேலாயுத சுவாமி கோவில் திருத்தேரே தமிழ்நாட்டின் 3வது பெரிய தேராகும். நேற்று (16.04.2022) சனிக்கிழமை அன்று வெகு விமர்சையாக தொடங்கிய  இந்த வருடத் தேர்த் திருவிழாவில் மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடி தேரை இழுத்து வந்தனர். இன்று(17.04.2022, ஞாயிறு) தேர் நிலை சேர்க்கும் விழாவாகும், இன்று காலை 6.00 மணிக்குத் தொடங்கிய தேரோட்டத்தை மக்கள் அனைவரும் பக்தியுடன் ஒற்றுமையாகத் தேரை நிலை சேர்த்தனர்.

இதைத் தொடர்ந்து நாளை (18.04.2022, திங்கள்) இரவு 7 மணிக்கு பரிவேட்டை நடைபெறும். அதற்கு அடுத்த நாள் (19.04.2022, செவ்வாய்) அன்று மாலை 4 மணிக்கு நடராஜர் மகாதரிசனம் நடைபெறும். விழாவின் இறுதியாக 20.04.2022 புதன் அன்று மாலை 6.00 மணிக்குத் திருவீதி உலா நடைபெற்று திருவிழா முற்றுப்பெறும்.

இந்த விழாவைக் காண பல்வேறு ஊருகளிலிருந்து மக்கள் வருவது சிறப்பாகும், தமிழகத்தின் 3வது மிகப்பெரிய தேர் என்ற சிறப்பு கொண்டதாகும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்