Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 80,438.40
-568.21sensex(-0.70%)
நிஃப்டி24,586.25
-163.60sensex(-0.66%)
USD
81.57
Exclusive

மோசடி வழக்கால் மனவேதனை.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி தற்கொலை.. கோவையில் சோகம்!!

Sekar August 08, 2022 & 13:15 [IST]
மோசடி வழக்கால் மனவேதனை.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி தற்கொலை.. கோவையில் சோகம்!!Representative Image.

கோவையில், தன் மீது பண மோசடி புகார் அளித்ததால் வமனவேதனை அடைந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் பிரசன்னசாமி குடும்பத்தோடு விஷம் குடித்ததில், பிரசன்னசாமி மற்றும் அவரது தாயார் உயிரிழந்தனர்.

கோவை மாநகரில் உள்ள செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் பிரசன்னசாமி (வயது 41). இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவின் துணைத் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் கோவை செல்வபுரம் காவல்நிலையத்தில் பிரசன்னசாமி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கருப்பையா தனது புகாரில், பிரசன்னசாமியும், அவரது மனைவி அஸ்வினியும் சேர்ந்து தன்னிடம் 25 லட்ச ரூபாய் பணம் மற்றும் 15 பவுன் நகையை மோசடி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரசன்னசாமி முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை. தன் மீது மோசடி புகார் செய்ததால் ஏற்கனவே மன அதிர்ச்சியில் இருந்த பிரசன்னசாமிக்கு ஜாமீன் கிடைக்காதது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து பிரசன்னசாமி மற்றும் அவரது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் பிரசன்னசாமியின் மகள் ஆகியோர் கடந்த 3ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக குடும்பமாக சேர்ந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.

இதற்கிடையே அவர்களின் தற்கொலை முயற்சி குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரசன்னசாமியின் தயார் கிருஷ்ணகுமாரி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். 

எனினும் உயிருக்கு போராடிய பிரசன்னசாமி, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பிரசன்னசாமி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தகவலறிந்த பிரசன்னசாமியின் உறவினர்கள் மருத்துவமனையில் கூடி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது ரேஸ் கோர்ஸ் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்