Sat ,Oct 19, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Salem News Today: பூத்துக்குலுங்கும் பூங்கா மலர்…! காண்போர்களை கவர்ந்திழுக்கும் செவ்வந்தி, ரோஜாப் பூக்கள்

Gowthami Subramani May 09, 2022 & 17:40 [IST]
Salem News Today: பூத்துக்குலுங்கும் பூங்கா மலர்…! காண்போர்களை கவர்ந்திழுக்கும் செவ்வந்தி, ரோஜாப் பூக்கள்Representative Image.

Salem News Today: சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் கோடை காலத்தில் நிகழும் கண்காட்சிக்குப் பஞ்சமே இல்லை. தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஏற்காடும் முக்கிய இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள கண்கவர் இடங்களைக் காண தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் மக்கள் படையெடுத்து வருவர்.

கண்காட்சி நடத்தப்படவில்லை

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த கொரோனா தாக்கத்தினால், மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. நடப்பாண்டு கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஏற்காட்டிற்குப் பெருமை வாய்ந்த மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இடம்பெற்றுள்ள மலர்கள்

இந்த ஆண்டில் நடத்தப்படும் மலர்க் கண்காட்சிக்காக தோட்டக்கலை துறையினர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஸ் கார்டன் போன்ற இடங்களில் 40 வகையான மலர்களால் 2 லட்சம் அளவிலான செடிகளின் விதைகளை நடும் பணியைத் தொடங்கியுள்ளனர். இதில், பால்சம், ஜினியா, கால்வியா, கிரைசாந்தியம், ஜெரேனியம், பேன்சி, பெட்டுனியா, மேரிகோல்ட், ஆஸ்டர், கைலார்டியா போன்ற மலர்கள் அடங்கும். இதில் ஏற்காடு ரோஜா என அழைக்கப்படும் டேலியா செடிகள் சுமார் 4000 அளவிற்கு கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்டு நட்டு வைக்கப்படுகின்றன.

பூத்துகுலுங்கும் செடிகள்

இவ்வாறு அந்தப் பகுதியில் பதியம் செய்யப்பட்ட விதைகள் செடியாக மாறி தற்போது பூத்துக் குலுங்குகின்றன. மேலும், அண்ணா பூங்கா நிறுவனத்தினர், பூங்காவின் பல்வேறு இடங்களில் பூந்தொட்டிகளை வைத்து பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இதையடுத்து மலர் கண்காட்சி அண்ணா பூங்காவில் நடத்தப்பட உள்ள நிலையில், அங்கு இருக்கும் கண்ணாடி மாளிகையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு மலர்கள் பூத்துக் குலுங்குவதால், மலர் கண்காட்சிகளை நடத்துவதற்கான தேதி எப்போது அறிவிக்கப்படும் என சுற்றுலாப்பயணிகள் ஆரவாரமாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்