தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்றால் அதில் ரஜினி, கமலுக்குப் பிறகு அஜித், விஜய் தான் வந்து நிற்பார்கள். அவர்களது படங்கள் ஒரே நாளில் வெளியாகி சில வெற்றியும், சில தோல்வியும் பெற்றிருந்தன. அந்த வகையில் இப்போது மீண்டும் இரண்டு நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது என தகவல் வந்துள்ளது.
8 வருடங்களுக்கு முன்னர் விஜய் நடிப்பில் ஜில்லா படமும், அஜித் நடிப்பில் வீரம் படமும் ஒரே நாளில் வெளியாகியிருந்தது. அதில் இரண்டு படங்களும் நல்ல வசூலைப் பெற்றது என்னவோ உண்மைதான். ஆனால் கண்டென்ட் அடிப்படையில் எந்த படம் வெற்றி பெற்றது என்பதை நேயர்களின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறோம்.
வரும் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஏகே61 படமும், விஜய் நடிப்பில் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. வாரிசு படம் ஆரம்பத்தில் இருந்தே பொங்கலுக்குத்தான் என கூறி தொடங்கி உருவாகி வருகிறது. ஆனால் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஏகே61 படம் தள்ளிப் போகிறது.
பொங்கல் நாளில், விஜய், அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…