மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, அழகம்பெருமாள், பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம்தான் மாமன்னன். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக காத்திருக்கிறது படக்குழு.
பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் கால்ஷீட் பிரச்னை காரணமாகத்தான் இடையில் இப்படி ஒரு இடைவெளி ஆகிவிட்டது என கூறப்படுகிறது.
இந்த படத்தின் பெயரான மாமன்னன் என கேள்விப்பட்டதும் உதயநிதிதான் மாமன்னனாக நடிக்கிறார் என சிலர் நினைத்திருக்ககூடும். ஆனால் உண்மையில் உதயநிதி வடிவேலுவின் மகனாக நடிக்கிறாராம். மாமன்னன் எனும் கம்பீர அடையாளத்துக்கு ஏற்ப ஒரு கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார் என்கிறார்கள். எதிர் கட்சி தலைவராக நடிக்கும் அழகம்பெருமாளின் மகன் தான் பஹத் பாசிலாம்.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் பஹத் பாசில் ஆகியோருக்கு இடையில் முட்டல் மோதல் காட்சிகள் இருக்கின்றனவாம். அவை ரசிகர்களின் பல்ஸை பிடித்து பார்த்து வெறித்தனமாக எடுக்கப்பட்டுள்ளதாம்.
ஜூலை மாத இறுதிக்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. விரைவில் திரைக்கு கொண்டு வந்துவிட்டு அடுத்த படத்துக்கு செல்ல உதயநிதி ஸ்டாலின் காத்திருக்கிறார் என்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…