Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 80,827.08
-179.53sensex(-0.22%)
நிஃப்டி24,717.50
-32.35sensex(-0.13%)
USD
81.57
Exclusive

300 கோடி.... பத்தல பத்தல.. பத்தே நாளில் வெறித்தனமாக ஆட்டம் போடும் விக்ரம்....!

UDHAYA KUMAR June 14, 2022 & 14:59 [IST]
300 கோடி.... பத்தல பத்தல.. பத்தே நாளில் வெறித்தனமாக ஆட்டம் போடும் விக்ரம்....!Representative Image.

கமல்ஹாசனின் திடீர் வருகையால் கோலிவுட்டே ஆட்டம் கண்டு போயுள்ளது. கமலின் பழைய ரெக்கார்டுகள் பற்றி அறியாதவர்கள் கூட இப்போது தெரிந்துகொண்டு நாலு ஸ்டெப் பின் சென்றுள்ளனர். இன்னமும் ரஜினி - கமல் யுகம்தான் நடந்துகொண்டிருக்கிறது என்பதை 2கே கிட்ஸ்களும் புரிந்துகொண்டிருப்பார்கள். ஆண்டவர் அடித்த அடி அப்படி. 

தமிழ் சினிமாவின் 3 முக்கிய படங்கள் ஆடிப் போயுள்ளன. அவை படைத்த சாதனைகளை தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அடுத்த நல்ல படத்தை எப்படி கொடுக்கலாம் என ரஜினி, விஜய், அஜித் போன்றோர் தங்களது இயக்குநர்களுடன் பேசி வருவதாக தெரிகிறது. 

கமல்ஹாசன் சினிமாவில் மார்க்கெட் இழந்துவிட்டார். அவர் இனி படங்கள் நடிக்கமாட்டார். அப்படி நடித்தாலும் சராசரி வெற்றியை பெறுவதற்கே தடுமாறுவார் என ஏகப்பட்ட கருத்துக்களை கோலிவுட்டில் விதைத்துக்கொண்டிருந்தனர் இடைத் தரகர்கள். விக்ரம் படம் வெளியான பிறகும் கூட இது நல்ல கதை இல்லை. சுமாரான படம் என பேச ஆரம்பித்தனர். ஆனால் மக்கள் சுதாரித்துக்கொண்டு நேரடியாக படத்தையே பார்த்துவிட்டதன் காரணமாக, அவர்கள் அடக்கி வாசிக்கின்றனர். 

இதுவரை கமல்ஹாசன் மிக அற்புதமான கதைகளை படமாக்கியுள்ளார் அப்போதெல்லாம் சப்போர்ட் செய்யாமல் அவரை கைக் கொடுத்து தூக்காமல் இப்படிலாம் படம் எடுத்தா எப்படி ஓடும்னு சொல்லிட்டு, இப்ப ஓடுற மாதிரி படம் எடுத்தா கதை சரியில்லை திரைக்கதை சரியில்லைனு சொல்றாங்க. இந்த ஆதங்கம் கமலுக்கும் இருந்திருக்கும்போல. மனுசன் இயக்குநர் குழுவை கொண்டாடித் தீர்த்துவிட்டார். 

உலக அளவில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த தமிழ் படங்கள் மொத்தம் 3. அதில் இரண்டு ரஜினி படம் ஒன்று கமல் படம்.  விக்ரம் தற்போது 300 கோடியைக் கடந்துள்ளது.  முன்னதாக பிகில் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல், 300 கோடியைத் தாண்டியிருந்தது. அதே நேரம் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் வந்த 2.0 படம் நஷ்டத்தில் தடுமாறியதாக கூறப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 600 கோடி செலவில் எடுக்கப்பட்டதால், அதற்கான லாபம் பெரிய அளவில் இல்லாதநிலையிலும் 300 கோடி ரூபாயைக் கடந்தது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்