Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,291.90
285.29sensex(0.35%)
நிஃப்டி24,855.10
105.25sensex(0.43%)
USD
81.57
Exclusive

Elon Musk Acquired Twitter: வெற்றிகரமாக ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்...

Priyanka Hochumin April 26, 2022 & 08:00 [IST]
Elon Musk Acquired Twitter: வெற்றிகரமாக ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்...Representative Image.

Elon Musk Acquired Twitter: ட்விட்டரை $44 பில்லியனுக்கு ஒப்பந்தம் செய்து கையகப்படுத்தியுள்ளார் எலான்மஸ்க்.

கடந்த மாதம் முதல் மஸ்க் மற்றும் ட்விட்டர் பெயர் தான் ட்ரெண்டிங்காக இருந்தது. ட்விட்டரை கைப்பற்றும் நோக்கத்தில் அந்த நிறுவனத்தின் அதிகபடியான ஷேரை வாங்கியுள்ளார் மஸ்க். பின்பு ட்விட்டர் நிறுவன குழுவுடன் சேர்க்கும் பேச்சு வார்த்தைகள் நடந்தது. பின்பு மஸ்க் நிறுவன குழுவில் சேர மறுப்பு தெரிவித்தார். பின்பு நேற்று ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்ற ஒப்பந்தம் பேசியுள்ளார் போன்ற வெவ்வேறு தகவல்கள் வெளியாகின.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சுமார் மில்லியன் கணக்கான பயனர்கள் மற்றும் உலகளாவிய தலைவர்கள் வசிக்கும் சமூக ஊடகத் தளத்தை, உலகின் மிக பெரிய பணக்காரரான எலான்மஸ்க் $44 பில்லியனுக்கு ட்விட்டரை கையகப்படுத்தினார். இந்த தகவல் கடந்த வாரம் வரை நிச்சயமில்லாத ஒன்றாக இருந்தது, இருப்பினும் வார இறுதியில் மஸ்க் ட்விட்டர் பங்குதாரர்களை சலுகைகளுடன் முடக்கியுள்ளார். 

ட்விட்டர் 2013 ஆம் ஆண்டு முதல் ஆரம்ப பொது வழங்கலில் இருந்து ஒரு பொது நிறுவனமாக இயங்கியது. ஆனால், அழுத்தத்தின் கீழ் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலைக்கு $54.20க்கு வாங்குவதற்கு மஸ்க் உடன் பேச்சுவார்த்தை நடக்க ஆரம்பித்தது. தற்போது மஸ்க் நிறுவனத்தை கைபற்றியதால் இனி பொது நிறுவனமாக ட்விட்டர் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், " உலகம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கமும் பொருத்தமும் ட்விட்டருக்கு உண்டு. மேலும் எங்கள் குழுவில் இருக்கும் பாண்டியர்களை பார்த்து பெருமை படுகிறோம் மற்றும் அவர்களின் பணியால் ஈர்க்கப்படுகிறோம்" என்று கூறினார். 

எலான்மஸ்க்,  " சுதந்திரமான பேச்சு என்பது செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும், மேலும் ட்விட்டர் என்பது டிஜிட்டல் டவுன் சதுக்கமாகும், அங்கு மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு இன்றியமையாத விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன," என்றும் " புதிய அம்சங்களைக் கொண்ட தயாரிப்பு, நம்பிக்கையை அதிகரிக்க, ஸ்பேம் போட்களைத் தோற்கடித்து, அனைத்து மனிதர்களையும் அங்கீகரிக்க அல்காரிதங்களை ஓப்பன் சோர்ஸ் ஆக்குகிறது. ட்விட்டர் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது - நிறுவனத்துடனும் பயனர்களின் சமூகத்துடனும் இணைந்து அதைத் திறக்க நான் காத்திருக்கிறேன்" என்று கூறினார். 

இந்த தகவல் வெளியானதை அடுத்து தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் பங்கு சுமார் 6% அதிகரித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்